சிங்கப்பூரில் அடுத்த மாதம் 15 முதல் 19 வரையிலான தேதிகளில் எஃப்-1 இரவு நேர கார் பந்தயம் நடைபெற உள்ளது. இதையொட்டி முக்கிய சாலைகள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது.
சிங்கப்பூரில் இந்த ஆண்டுக்கான எஃப்1 இரவுநேரக் கார்ப் பந்தயம் (F1- Night Race) செப்டம்பர் 15 முதல் 19வரையிலான தேதிகளில் நடைபெறவிருக்கிறது. அதை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி முதல், ஒரு வார காலத்திற்கு மரினா சென்டரிலும் பாடாங்கிலும் சில சாலைகள் தற்காலிகமாக போக்குவரத்துக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக விரைவு ரயில்கள் கூடுதல் நேரத்திற்குச் சேவை வழங்கப்படும் என்றும், மக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான குறிப்பிட்ட சில பேருந்துகள் சேவைகள், வழக்கமான பாதைகளில் இல்லாமல், மாற்று பாதைகளில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
F1 night race இரவு நேரக் கார் பந்தயம் என்பதால், குறைவான அளவிலேயே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை உறுதிசெய்யவும், பந்தயம் முடிந்த பிறகு படிப்படியாக மூடிப்பட்ட சாலைகளை மீண்டும் போக்குவரத்திற்குத் திறந்துவிடவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக சாலை போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
எங்களுக்கு மொத்தம் 4 குழந்தைகள்.. காரணம் என்ன தெரியுமா? சீக்ரெட் சொன்ன முன்னாள் அமைச்சர் சண்முகரத்தினம்!
பொதுப் பேருந்தை பயன்படுத்த அறிவுறுத்தல்
செப்டம்பர் 13 முதல் 19ம் தேதி வரையில் பொதுமக்களும் கார் பந்தயத்தை காண்பதற்கான டிக்கெட் பெற்றிருந்தால், மரினா சென்டர், பாடாங் பகுதிகளுக்கு பொதுப் போக்குவரத்தில் சென்று பந்தயத்தை கண்டுகளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சீராக இருப்பதை உறுதிசெய்ய, போக்குவரத்துக் கண்காணிப்பாளர்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட்டிருப்பர்.
கவனக்குறைவால் மாற்றி வழங்கப்பட்ட அஸ்தி! உயிரிழந்தவரின் குடும்பத்தினர் வருத்தம்!
எஃப் 1 கார் பந்தயம் நடைபெறும் பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையில் வழிகாட்டிக் குறியீடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வட்டாரத்திற்குச் செல்வோர் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட, https://go.gov.sg/f1 எனும் இணையத்தளத்தில் உள்ள வழிகாட்டிக் குறிப்பேட்டை நாடலாம் என சிங்கப்பூர் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.