இது நேரு காலத்து இந்தியா அல்ல "மோடியின் புதிய இந்தியா".!! கால்வானில் மிரட்டும் சீனாவுக்கு, பகிரங்க எச்சரிக்கை

By Ezhilarasan BabuFirst Published May 27, 2020, 4:29 PM IST
Highlights

சீனா இந்தியாவுக்கு மன அழுத்தத்தை உருவாக்க தொடங்கியுள்ளது.  கடந்த 1962-ஆம் ஆண்டு போரை இந்தியாவுக்கு நினைவூட்டி அச்சுறுத்த பார்க்கிறது,  

சீன ராணுவத்தை எதிர்கொள்ளும் வகைகள் லடாக் எல்லைப் பகுதியில்  ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை இந்தியா அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதேபோல் திபெத் எல்லைப் பகுதியிலும் இரண்டு படைப் பிரிவுகளை சீனா நிறுத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில்,  இந்திய வீரர்கள் திபெத்  போன்ற  உயரமான பகுதிகளில் போரிட பயிற்சி பெற்றவர்கள் என்பதனால்  சீன படைகளை திறமையுடன் எதிர்கொள்வார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இந்தியா சீனா இடையே எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது,  இரு நாடுகளும் எல்லையில் ஏராளமான படைகளை குவித்து வரும் நிலையில்,  சீன அதிபர் ஜி ஜின்பிங் போருக்கு தயாராகும் படி  தன் நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.  இந்திய பிரதமர் மோடியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும்  முப்படை தளபதிகளுடன் எல்லை பதற்றம்  குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் ராணுவ மூத்த அதிகாரி ஒருவர்,  ஆஸ்திரேலியாவில் இருந்து ஹாங்காங் வரை, தைவானில் இருந்து தென்சீனக்கடல் வரை, இந்தியாவில் இருந்து அமெரிக்கா வரை,  சீன கம்யூனிஸ்ட் கட்சி எல்லா வகையிலும் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறது எனகூறியுள்ளார். 

 பிரதமர் மோடியுடன் நடைபெற்ற ஆலோசனையில் கலந்து கொண்ட முக்கிய 3 அதிகாரிகளும்  கடந்த மூன்று ஆண்டுகளில் இதுபோன்ற  சூழ்நிலையை இரண்டாவது முறையாக சந்திக்கின்றனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால்,  பாதுகாப்பு படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  ஆகிய இதே அணி தான் கடந்த 2017-இல் டோக்லாமில் இந்தியாவின் எல்லை உறுதிபாட்டை சீனாவுக்கு தெளிவாக உணர்த்தினர்.  அதேபோல 73 நாட்கள் இந்திய சீன படைகள் ஒன்றையொன்று டோக்லாமில் எதிர்த்து நின்றன.  பின்னர் அந்த பிரச்சினை அமைதியாக முடிந்தது. பாதுகாப்பு படைத் தலைவர் பிபின் ராவத் அப்போது ராணுவத் தலைவராகவும்,  ஜெய்சங்கர் இந்திய  வெளியுறவுச் செயலாளராகவும் இருந்தார்.  இந்நிலையில் நேற்று மோடி தலைமையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் , 2017 ஆம் ஆண்டு இது போன்ற ஒரு சூழல் ஏற்பட்டபோது,  இந்திய ராணுவம் அதி வேகமாக செயல்பட்டு படைகளைக் எல்லையில் குவித்தது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்தியா-சீன எல்லையில் சீனாவுடன் பரஸ்பர மரியாதை மற்றும் உரையாடல் மூலம் , அமைதியான தீர்மானத்திற்கு ஆதரவாக இருப்பதாக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். ஆனாலும் பிரதமர் மோடி டோக்லாம் பகுதியில் எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அதன் முழு அர்த்தம் என்னவென்றால், அந்த பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தும், ஏனெனில் அங்கு இந்தியா உருவாக்கியுள்ள கட்டமைப்புகளை தடுக்க முயற்சிக்கும் என்பதுதான் அது. தற்போது அமைக்கப்பட்டு வரும்  டர்போக்-ஷியோக்-டிபிஓ சாலை இந்த ஆண்டு நிறைவடையும், இது இப்பகுதியில் விரைவான ராணுவத்திறனை மேம்படுத்த அது உதவும் என அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு கொள்கையை வகுத்த முக்கிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஒருவேளை இந்த சாலை திட்டம் தடை செய்யப்பட்டால், சன்சோமா வழியாக முர்கோவுக்கு விமான விநியோகத்திற்கும்,  டிபிஓவிற்கும் கடினமான வழியைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

 

தற்போதைய சூழல் குறித்து தெரிவித்துள்ள முன்னாள் ராணுவத் தலைவர் ஒருவர், ஏற்கனவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பாங்கொங் த்சோ மற்றும் கால்வான் பகுதிகளில் பல மோதல்கள் நடந்துள்ளன,  சீனா தனது பகுதி என  உரிமை  கொண்டாடிய பகுதிகளில் எந்த வித எதிர்ப்பும் இன்றி  கட்டமைப்பு பணிகளை செய்து முடித்துள்ளது, இந்நிலையில் இந்தியாவும் எல்லையில் கட்டமைப்பை உருவாக்குவது,  சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.  சீன தரப்பில் உள்ள அனைத்து இராணுவ முகாம்களும்  நடைபாதை சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்,  இதற்கிடையில் சீனா அதன் நெருங்கிய நண்பனாக பாகிஸ்தானுடன் சேர்ந்து இந்தியாவை  முறைத்துக் கொள்ள விரும்புகிறது, கில்கிட் மற்றும் பால்டிஸ்தான் பகுதியிலும்  ராணுவம் ஊடுருவச் செய்து வருகிறது என எச்சரித்துள்ளார்.  இந்நிலையில்  மூத்த அமைச்சரவை மந்திரி ஒருவர்,  சீனா இந்தியாவுக்கு மன அழுத்தத்தை உருவாக்க தொடங்கியுள்ளது.  கடந்த 1962-ஆம் ஆண்டு போரை இந்தியாவுக்கு நினைவூட்டி அச்சுறுத்த பார்க்கிறது,  ஆனால் இது 2020 ஆம் ஆண்டிலான நரேந்திர மோடி தலைமையின் கீழ் உள்ள இந்திய ராணுவம் என எச்சரித்துள்ளார். 
 

click me!