போற போக்க பார்த்தா அமெரிக்கா மீதே போர் அறிவிக்கும்போல சீனா..!! ஆணவத்தில் துள்ளிக் குதிக்கும் ஜி ஜின் பிங்..!

By Ezhilarasan BabuFirst Published May 27, 2020, 2:41 PM IST
Highlights

இந்நிலையில்,  ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்க தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இதனால் போராட்டத்தை முற்றிலுமாக ஒடுக்க சீனா தீவிரம்  காட்டி வருகிறது.

சீனாவின் தேசிய நலன்களுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து செயல்படும் பட்சத்தில், அதற்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை சீனா எடுக்கும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.  ஹாங்காங்கில் சீனா புதிய பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தால்  அது ஹாங்காங்கின் சிறப்பு வர்த்தக நலன்களை முடிவுக்கு கொண்டு வரக்கூடும் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில் சீனா இவ்வாறு கூறியுள்ளது.  கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஹாங்காங் கடந்த 1997 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்று சீனாவுடன் இணைந்தது. அப்போது போடப்பட்ட  இங்கிலாந்து -சீனா இடையேயான ஒப்பந்தத்தில் ஹாங்காங்கின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் எனவும், மற்ற சட்டங்களை அது சுயமாக இயற்றலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. 

இந்த ஒப்பந்தம் வெறும் 50 ஆண்டுகள், அதாவது 2047 ஆம் ஆண்டு வரை மட்டுமே அமலில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சீனா ஒட்டுமொத்த ஹாங்காங்கையுமே தன் முழுகட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.  இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஹாங்காங்கின் நிர்வாகத் தலைவர் கேரி லாம்,  ஹாங்காங் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக புதிய சர்ச்சைக்குரிய மசோதா ஒன்றை அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார்.  இந்த மசோதாவுக்கு  மக்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியது.  இந்த மசோதாவிற்கு எதிராகவும்,  சீனாவுக்கு எதிராகவும்  மக்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தை ஒடுக்க சீன ராணுவம் களத்தில் இறங்க அது கலகமாக வெடித்தது. இதனால் சீனாவிடமிருந்து முழு சுதந்திரம்  வேண்டும் என போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில்,  ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்க தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இதனால் போராட்டத்தை முற்றிலுமாக ஒடுக்க சீனா தீவிரம்  காட்டி வருகிறது. அதேபோல் தென்சீனக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்த அமெரிக்கா, ஜப்பான், தைவான் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான், ஹாங்காங்கில் எப்போது,  எப்படி,  சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பது சீனாவுக்கு தெரியும்,  ஹாங்காங் நகரில் பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது,  இதுபோன்ற நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும்,  இருப்பினும் புதிய சட்டம் குறித்து மக்கள் மத்தியில் இன்னும் குழப்பம் நிலவுகிறது ஆனால் அது சரிசெய்யப்படும், இதற்கிடையில் புதிய பாதுகாப்புச் சட்டத்தில்  அமெரிக்காவின் தேவையற்ற தலையீடு அதிகரித்து வருகிறது.  சீனாவின் நலன்களை அமெரிக்கா தொடர்ந்து பாதிக்கும் பட்சத்தில் அதற்கு எதிராக சீனாவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என எச்சரித்துள்ளார். 
 

click me!