ஆப்கனிஸ்தானின் தலைவிதியை எழுதப்போவது இந்த 3 பேர் தான்.. குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது ஜனநாயகம்.

By Ezhilarasan Babu  |  First Published Aug 19, 2021, 11:11 AM IST

மேலும் ஆப்கனிஸ்தான் ஜனநாயக நாடாக இருக்கப்போவதில்லை, ஆப்கானிஸ்தானை எந்த வழியில் நடத்துவது என்று நாங்கள் விவாதிக்க போவதுமில்லை, ஏனெனில் ஏற்கனவே அது தெளிவாகிவிட்டது. ஆட்சி நிர்வாகம் என்பது ஷரியா சட்டத்தின் படியே அமையும், ஜனநாயக முறைப்படி ஆட்சி செய்வதற்கு ஆப்கானிஸ்தானில் எந்த அடித்தளமும் இல்லை, 1996 முதல் 2001 வரை இல்லான தலிபான்கள் ஆட்சி எப்படி நடைபெற்றதோ அதேபல இப்போது நடைபெறும்,


ஆப்கானிஸ்தானை பொருத்தவரையில்  ஆட்சி நிர்வாகம் ஜனநாயக அடிப்படையில் இருக்காது என்றும், ஷரியா  சட்டத்தின்படி மூன்று பேர் கொண்ட கவுன்சில் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் என்றும், தலிபான்களின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டு போராட்டத்திற்கு பின்னர் தலிபான்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். தலிபான்கள் ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள் என்றும், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்பதால் அங்கே பழமைவாதம் மட்டுமே மேலோங்கி இருக்கும், சுதந்திரம் என்பது துளி கூட இருக்காது என அந்நாட்டு மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால் நாட்டை விட்டு வெளியேறும் பகிரத  முயற்சிகளிலும் அங்கு பலர் ஈடுபட்டு வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

இதனால் காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எப்போது என்ன நடக்குமோ என்ற பீதியும், எதிர்காலம் குறித்த அச்சமும் ஒவ்வொரு ஆப்கனிஸ்தானியர்களின் முகத்திலும் நிழலாடுகிறது. இந்நிலையில், தலிபான்களாகிய நாங்கள் இனி வன்முறையை கையில் எடுக்க போவதில்லை, எங்களுக்கு எதிராக செயல்பட்ட அரசு அதிகாரிகள், ராணுவத்தினருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. இனி ஆப்கனிஸ்தானில் ஆழ்ந்த அமைதி நிலைநாட்டப்படும். ஷரியத் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் நிச்சயம் பெண்களுக்கு வழங்கப்படும், என தலிபான் தலைவர்கள் பேட்டி கொடுத்துள்ளனர். அங்கு 20 ஆண்டுகளாக தழைத்தோங்கிய ஜனநாயக ஆட்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில், தலிபான்களின் ஆட்சி நிர்வாகம் எந்த வடிவத்தில் அமையப்போகிறது என்ற கேள்வி அந்நாட்டு  மக்களுக்கு மட்டுமல்லாது, சர்வதேச சமூகத்திடம் மேலோங்கியுள்ளது. 

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் எப்படி நடத்தப் போகிறார்கள் என்பது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு செய்யப்படவில்லை என தலிபான்களின் மூத்த தலைவர்களில் ஒருவரான வஹீதுல்லா ஹாஷிமி  ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.மேலும் ஆப்கனிஸ்தான் ஜனநாயக நாடாக இருக்கப்போவதில்லை, ஆப்கானிஸ்தானை எந்த வழியில் நடத்துவது என்று நாங்கள் விவாதிக்க போவதுமில்லை, ஏனெனில் ஏற்கனவே அது தெளிவாகிவிட்டது. ஆட்சி நிர்வாகம் என்பது ஷரியா சட்டத்தின் படியே அமையும், ஜனநாயக முறைப்படி ஆட்சி செய்வதற்கு ஆப்கானிஸ்தானில் எந்த அடித்தளமும் இல்லை, 1996 முதல் 2001 வரை இல்லான தலிபான்கள் ஆட்சி எப்படி நடைபெற்றதோ அதேபல இப்போது நடைபெறும், ஆட்சி நிர்வாகத்தின்  உச்ச தலைவர் முல்லா உமர் தலைமையில் அப்போது ஆட்சி நடைபெற்றது. 

இப்போதோவெனில் தலிபானின் உச்ச தலைமைக்கு மூன்று பிரதிநிதிகள் உள்ளனர். முல்லா உமரின் மகன் மவுலவி யாகூப்,  சக்திவாய்ந்த தீவிரவாத அமைப்பான ஹக்கானி நெட்வொர்க்கின் தலைவர் சிராஜூதீன் ஹக்கானி மற்றும்  தோஹாவில் அரசியல் பிரிவிற்கு தலைமை வகிக்கும் அப்துல்கனி பரதர் ஆகியோர் கவுன்சில் உறுப்பினர்களாக இருப்பர். இந்தக் கவுன்சில்தான் ஆட்சி அதிகாரத்தை நிர்வகிக்கும் என அவர் கூறியுள்ளார்.

 

click me!