மீண்டும் பிரிட்டன் பிரதமராகிறார் தெரசா மே…ராணி எலிசபெத் அனுமதி…

First Published Jun 9, 2017, 9:06 PM IST
Highlights
Theresa mea will be sarn on Britton Prime minister one more

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. இதற்கான அனுமதியை ராணி எலிசபெத் வழங்கியுள்ளார்.

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்த நிலையில், இன்று வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றது.

 மொத்தமுள்ள 650 இடங்களில் 649 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 319 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர் கட்சி 261இடங்களை பிடித்துள்ளது.

இதனால், கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி அமைப்பதற்கு தேவையான மெஜாரிட்டையை இழந்துள்ளது. அங்கு ஆட்சி அமைக்கும் கட்சி குறைந்தபட்சம் 326 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். 

இதனால், புதிய அரசை அமைப்பதற்கு பிரதமர் தெரசா மே மற்ற கட்சிகளின் ஆதரவை எதிர்ப்பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பிரிட்டனில் தொங்கு பாராளுமன்றம் ஏற்படுவது உறுதியாகியுள்ளது.

ஸ்காட்லாந்து தேசியவாத கட்சி 35, டெமகரட்டிக் யூனியனிஸ்ட் கட்சி 10 இடங்களையும் , ஜனநாயக ஒருமைப்பாட்டு கட்சி 23 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. இதனால், டெமகரட்டிக் யூனியனிஸ்ட் கட்சியை சேர்ந்த 10 எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க தெரசா மே தீர்மானித்தார்.

எனினும், பிரிட்டன் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி அங்கு நடைபெறும் பாராளுமன்ற தேர்தல்களில் அரசு அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காதபட்சத்தில் அந்நாட்டின் ராணி எலிசபத்திடம் முன் அனுமதி பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கலாம்.

அதன் அடிப்படையில், பிரதமர் தெரசா மே , பக்கிங்காம் அரண்மனைக்கு சென்று  ராணி எலிசபத்தை சந்தித்தார். டெமகரட்டிக் யூனியனிஸ்ட் கட்சியை சேர்ந்த 10 எம்.பி.க்கள் தங்களுக்கு அளித்துள்ள ஆதரவு கடிதங்களை ராணியிடம் அவர் அளித்தார்.

இதையடுத்து, அங்கு புதிய கூட்டணி அரசுக்கு தலைமையேற்க பிரதமர் தெரசா மேவுக்கு ராணி எலிசபத் அனுமதி வழங்கினார் அளித்தார். இதையடுத்து தெரசா மே மீண்டும் இங்கிலாந்து பிரதமராக இன்னும் ஓரிரு நாளில் பதவி ஏற்க உள்ளார்.

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. இதற்கான அனுமதியை ராணி எலிசபெத் வழங்கியுள்ளார்.

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்த நிலையில், இன்று வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றது.

 மொத்தமுள்ள 650 இடங்களில் 649 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 319 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர் கட்சி 261 இடங்களை பிடித்துள்ளது.

click me!