பிரிட்டன் பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை… ஆளுங்கட்சிக்கும்,எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் இழுபறி?

First Published Jun 9, 2017, 10:50 AM IST
Highlights
britain election vote counting


இங்கிலாந்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி இடையே கடும் இழுபறி நிலவுகிறது. 

இங்கிலாந்தின் 650 நாடாளுமன்ற தொகுதிகளிலும், ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து வாக்குஎண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

இதில், தற்போதைய நிலவரப்படி, 560 இடங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது இதில்  தொழிலாளர் கட்சியின் Jeremy Corbyn 257 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளார்.

ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் Theresa May-வுக்கு 303 இடங்கள் கிடைத்துள்ளன. ஏற்கனவே அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்த தெரசா மே வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 326 இடங்கள் தேவை என்ற நிலையில் , . வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் பின்னடைவை சந்தித்துள்ள பிரதமர் தெரசா மே உடனடியாக பதவி விலக வேண்டும் என தொழிலாளர் கட்சியின் Jeremy Corbyn வலியுறுத்தியுள்ளார்.

click me!