இந்தியாவில் அதிகரிக்கும் சிங்கப்பூர் நிறுவனங்கள்! போட்டி போடும் புதிய மற்றும் நவீன நிறுவனங்கள்!

By Dinesh TG  |  First Published Aug 28, 2023, 3:46 PM IST

இந்தியாவின் பன்முகத் தன்மை மற்றும் மார்கெட் வாய்ப்புகள் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு நுழைவாயிலாக மாறி வருகிறது. சிங்கப்பூரின் புதிய மற்றும் நவீன தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை இந்தியாவில் அமைக்கவும், விரிவுப்படுத்தும் நடவட்க்கைகளில் இறங்கியுள்ளன.
 


சிங்கப்பூரில் இருந்து இந்தியாவில் தங்கள் நிறுவனத்தின் அலுவலகங்களை அமைக்கும் முயற்சிகள் தற்போது அதிகமாக நடைபெற்று வருவதாக எண்டர்பிரைசஸ் சிங்கப்பூர் அமைப்பு தெரிவித்துள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த சுமார் 300 புதிய நவீன நிறுவனங்கள் கடந்த 2019ம் ஆண்டு முதல் இந்திய மார்க்கெட்டில் ஈடுபட்டு வந்துள்ளதாக எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சுமார் 140 கோடி மக்கள்தொகை உள்ளது. பல மொழி பேசக்கூடியவர்கள் வாழும் இந்தியா பன்முகத் தன்மையுடன் திகழ்கிறது. இந்த அம்சங்கள், சிங்கப்பூரின் தொடக்கக்கால புதிய நவீன நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகளை அளித்தன.

அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்ட சிங்கப்பூர் நிறுவனங்கள், பல்வேறு வகையான இந்திய வாடிக்கையாளர்களுக்குத் தேவையான பொருள்களை, சேவைகளை சிங்கப்பூர் நிறுவனங்கள் பரிசோதித்துப் பார்த்தன.

இதுபோன்ற நிறுவனங்களில் ஒன்றான, ஸ்மார்ட்கிளீன் நிறுவனம் சிங்கப்பூரில் கடந்த 2017ல் தொடங்கப்பட்து. இந்த நிறுவனம் கணினித் தரவுகளைக் கொண்டு துப்புரவு பணிகளுக்கான சேவைகளை வழங்குகிறது.

இந்த நிறுவனத்தின் இந்தியக் கிளையின் தலைவரான நிஷானி குமார் தெரிவித்துள்ள கருத்தில், இந்தியாவே ஒரு கண்டம் என்றும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி அவற்றைச் சோதித்துப் பார்க்க இந்தியா நல்ல ஒரு சந்தைமதிப்பை கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்திய சந்தை மற்றும் மக்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப எல்லாம் பரிசோதனை நடத்தி குறைகள் எல்லாம் களையப்பட்டு இந்தோனேசியா, துபாய், மலேசியா போன்ற நாடுகளில் சேவை வழங்க ஏதுவாகும் என்று அவர் தெரிவித்தார்.

போட்சிங்க் என்ற தொழில்நுட்ப நிறுவனம் கடந்த 2017ல் சிங்கப்பூரில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம், இரண்டு ஆண்டுகள் அதன் தொழிற்சாலையை பெங்களூருவில் அமைத்தது. மேலும், இது அசோக் லேலண்ட் என்ற இந்திய நிறுவனத்திற்கு தனது இயந்திர சாதனங்களை விற்று வருகிறது.

இதேபோல், 2018ல் நிறுவப்பட்ட எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு இந்தியாவில் ஒரே சீராக விரிவடைந்து வருகிறது. சிங்கப்பூரின் சிறிய, மற்றும் நடுத்தர நிறுவனங்கள் புத்தாக்க முறைகளைக் கொண்டு உலகமயமாக்களுக்கு உதவுவதே இந்த எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் நோக்கமாகும்.

சாங்கி விமான நிலையத்தில் தானியங்கி பிரிட்ஜ்.. இனி நேரம் விரையமாகாது - அடுத்த கட்டத்திற்கு நகரும் சிங்கப்பூர்!

Tap to resize

Latest Videos


இந்த அமைப்பு, கடந்த 2022ல் சிங்கப்பூரைச் சேர்ந்த 100 நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் உள்ள புதிய வாய்ப்புகளை பெருக்க ஆதரவு அளித்துள்ளது.

இந்தியா தொடர்ந்து மின்மயமாக வருகிறது. வணீக ரீதியில் அதன் போட்டித்திறன் அதிகமாக வளர்ந்து வருகிறது. உள் கட்டமைப்பு வசதிகள், உற்பத்தித்துறை, லைஃப்ஸ்டைல், ஆகியவற்றைச் சார்ந்த நிறுவனங்களுக்கு மேலும் மேலும் ஈர்க்கும் சந்தையாக இந்தியா உருவாகி வருகிறது.

டெக்னாலஜியில் உச்சம் தொட்ட சிங்கப்பூரை பிரமிக்க வைத்த இந்தியா.. சந்திரயான் 3 - வாழ்த்து சொன்ன சிங்கை அமைச்சர்!

click me!