Singapore : சிங்கப்பூரில் தன்னுடன் உடலுறவில் ஈடுபடுவதற்காக ஒரு பெண்ணுக்கு இரண்டு முறை பணம் கொடுத்த ஒரு நபர், அதற்கு பிறகும் தன்னை அந்த முழுமையாக திருப்திப்படுத்தவில்லை என்று கூறி அந்த பெண்ணிடம் காசை திரும்ப கேட்டு தகராறு செய்த நபரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் தன்னிடம் உறவுகொள்வதற்காக ஒரு பெண்ணிடம் காசு கொடுத்து, பின்னர் அவர்கள் தனது முழுமையாக திருப்தி அளிக்கவில்லை என்று கூறிய அந்த பெண்ணிடம் பணத்தை திருப்பிக்கேட்டது மட்டுல்லாமல், அவரிடம் கொடுத்த 260 சிங்கப்பூர் டாலரை (சுமார் 15800 ரூபாய்) அவரிடம் இருந்து பெற ஒரு உலோகத் தண்ணீர் பாட்டிலால் அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.
சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் Goh Jun Liang என்ற அந்த 28 வயது நபர் கடந்த செவ்வாயன்று, ஒரு பெண்ணுக்கு காயத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அந்த நபருக்கு இப்பொது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் அமலில் உள்ள GAG விதியின் கீழ் பாதிக்கப்பட்ட அந்த சீன பெண்ணின் பெயர் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
ஒரு மருந்து நிறுவனத்தில் பணிபுரியும் மலேசியரான அந்த நபர், கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி, 2023 அன்று இரவு 7 மணியளவில் பாலியல் சேவைகளை விளம்பரப்படுத்தும் இணையதளத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் ப்ரோபைலை கண்டதாக அரசு வழக்கறிஞர் ஷான் லிம் வெளியிட்ட தகவலில் கூறினார். மேலும் அந்த பெண் தன்னுடன் உறவுகொள்ள 130 சிங்கப்பூர் டாலர் (சுமார் 8000 ரூபாய்) கேட்டதாக அந்த இணையதளத்தில் இருந்ததாகவும், ஆகையால் அன்று இரவு அந்த பெண்ணை சந்திக்க ஏற்பாடு செய்ததாவும் அவர் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் மலிவு விலையில் iPhone விற்பனை! போலியானதா என சந்தேகத்தில் ஒருவர் கைது!
இரவு 8 மணிக்கு அவர் அங்கு சென்றபோது, கோ அந்த பெண்ணிடம் $130 கொடுத்து உடலுறவு கொண்டுள்ளார். பின்னர், அந்த பெண் ஆடைகளை அணிந்துகொள்ள தயாரானபோது, அந்த நபர் மீண்டும் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆகையால் அந்த பெண்ணிடம் கூடுதலாக 130 சிங்கப்பூர் டாலர் கொடுத்துள்ளார்.
ஆனால் சில நிமிடங்களுக்கு முன்பு தான் அவர் உடலுறவு கொண்டார் என்பதால், அவரால் அந்த முறை உடலுறவில் ஈடுபடமுடியவில்லை. இதனால் அந்த பெண்ணை வேறுவித்தலில் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண் செய்த சேவைகள் திருப்த்தி அளிக்கவில்லை என்று கூறி அவர் கொடுத்த பணத்தை மொத்தமாக திரும்பக்கேட்டுள்ளார்.
ஆனால் அந்த பெண் மறுத்த நிலையில், அங்கிருந்த ஒரு உலோக தண்ணீர் பாட்டிலால் அவரை கொடூரமாக தாக்கியுள்ளார். மேலும் அந்த பெண்ணின் கழுத்திலும் காயங்களை ஏற்படுத்தியுள்ளார். இறுதியில் அங்கிருந்து ஓடிய அந்த நபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.