தலைக்கு தில்ல பாத்தியா.. வெறும் கையில் ராட்சத பாம்பை பிடித்த நபர்.. நீங்களே வீடியோவை பாருங்க..

By Ramya s  |  First Published May 27, 2023, 4:57 PM IST

வெறும் கையால் ராட்சத பாம்பை பிடிக்கும் ஒரு நபரின் வீடியோ வைரலாகி வருகிறது.


சமூக ஊடகங்கள் இல்லாமல் வாழ முடியாத என்ற சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம்.. வேலை இல்லாத நேரத்தில் பலரும் சமூக வலைதள பக்கங்களில் வீடியோக்களை பார்ப்பதை பழக்கமாக கொண்டுள்ளனர். எனவே சமூக ஊடக உலகத்தில் நாம் கற்பனை கூட செய்ய முடியாத பல விஷயங்களை பார்க்கிறோம்.அந்த வகையில் விலங்குகளின் வீடியோக்கள், குழந்தைகளின் குறும்புத்தனமாtஹன வீடியோக்கள் என பல வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க : ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் அரிகொம்பன்; 144 தடை உத்தரவு பிறப்பித்த அரசு

Tap to resize

Latest Videos

அப்படி நாம் காணும் வீடியோக்கள் நம்மை சில நேரங்களில் சிரிக்க வைக்கின்றன, சில நேரங்களில் சிந்திக்க வைக்கின்றன.. இன்னும் ஒரு சில வீடியோக்கள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன.. சில வீடியோக்களை அதிர்ச்சியடைய வைக்கின்றன, சில வீடியோக்கள் சோகத்தை ஏற்படுத்துகின்றன.

அந்த வகையில் வெறும் கையால் பாம்பை பிடிக்கும் ஒரு நபரின் வீடியோ வைரலாகி வருகிறது. பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். ஆனால் ஒரு மலேசிய ஆயுதப்படை அதிகாரி தனது வெறும் கையால், ஒரு விஷ நாகப்பாம்பை அச்சமின்றி பிடிக்கிறார். இந்த வீடியோ உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது. அந்த வீடியோவில், அந்த நபர் படையெடுத்து நிற்கும் நாகப்பாம்புடன் நேருக்கு நேர் நின்று கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

மின்னல் வேகத்துடனும் துல்லியத்துடனும், அவர் பாம்பின் தலையை பிடிப்பதை பார்க்க முடிகிறது. ரெடிட் தளத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ உலகம் முழுவதும் உள்ள பயனர்களை ஈர்த்துள்ளது. மேலும் அந்த நபரின் செயலை பார்த்து ஆச்சர்யமடைந்த பயனர்கள் எப்படி இது சாத்தியமானது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது யூ டியூபிலும் பதிவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அணுஆயுத நிலைநிறுத்தம் குறித்து எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் - அமெரிக்காவை கலாய்த்த ரஷ்யா

click me!