சீனாவில் சுடச்சுட நாய்கறி திருவிழா - விலங்குநல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

Asianet News Tamil  
Published : Jun 22, 2017, 03:52 PM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
சீனாவில் சுடச்சுட நாய்கறி திருவிழா - விலங்குநல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

சுருக்கம்

The festivities began between strong protests in china

சீனர்கள், பாம்பு, பல்லி, தேள், வண்டு, பூச்சிகள் என்று பல  ஊர்வன உயிரினங்களை உணவாக உட்கொள்வார்கள் என்று நாம் கேட்டு இருக்கறோம். ஆனால்,  இந்த ஜூன் மாதத்தில், நம்மில் பலர் ஆசையாக வளர்க்கும் நாய்களும் சீனர்களின் உணவுப் பட்டியலில் இடம்பெறுகின்றன என்பது தெரியுமா?

தொடங்கியது

விலங்குகள் நல ஆர்வலர்கள், அமைப்புகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நேற்று முன் தினம்யூலின் மாவட்டத்தில் நாய் கறித் திருவிழா மிகச்சிறப்பாகத் தொடங்கியது.

நாய்கறி சூப், கறி

சீனாவின் தெற்கு மாநிலமான குவாங்ஸியில்உள்ள யூலின் மாவட்டத்தில் தான் இந்த நாய்கறி திருவிழா நடைபெறுகிறது.
கோடையின் உச்சத்தை கொண்டாடும் பொருட்டு, இந்நகரின் உணவகங்களில் நாய் இறைச்சியுடன், மது, பழங்கள் மற்றும் இதர பிற உணவுகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

நாய்கறி சூப், நாய்கறி, அரிசி சாதம், நூடுல்ஸ்ஆகியவை இந்த திருவிழாவில் சிறப்பு அம்சமாகும். அருவருப்பு கொள்ளும் நாய்கறியாக உணவகங்களில் செல்லும் நாய்கறி, ருசியாக மாற்றப்பட்டு, மக்களுக்கு விற்பனைக்காக அளிக்கப்படுகிறது.

10 ஆயிரம் நாய்கள்

இந்த நாய் கறி திருவிழா என்பது ஜூன் மாதத்தில் சூரியன் உச்சத்தை எட்டும் 21ந் தேதியை மையப்படுத்தி அதற்கு முன் சில நாட்களும், பின் சில நாட்களும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 ஒவ்வொரு ஆண்டு இந்த விழாவில் ஏறக்குறைய நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் நாய்கள் கொல்லப்பட்டு, கறியாக பரிமாறப்படும் எனக் கூறப்படுகிறது.

தடை

சீனாவின் விலங்குகள் நலவாரிய அமைப்புகள், ஆர்வலர்கள் இந்த கொடூரமான  நாய் கறி திருவிழாவை நிறுத்துமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடந்த ேம மாதம் இந்த நாய்கறி திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், இந்த ஆண்டு நாய்கறி திருவிழா நடக்குமா எனக் கேள்வி எழுந்தது. ஆனால், சீன மக்களின் பாரம்பரிய உணவுப் பழக்கத்தை தடுக்க அந்த அரசுக்கு விருப்பமில்லை.

சமாதானம்

இதையடுத்து, நாய்கறி விற்பனையாளர்களுக்கும், விலங்குகள் நல ஆர்வலர்களுக்கும் இடையே சமரசப்பேச்சு நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, ஒரு இறைச்சிக்கடையில் இரு நாய்களை மட்டும் வாடிக்கையாளர்கள் பார்வைக்கு தொங்க விடலாம். மற்ற மாமிசங்களை கடைக்குள் வைக்க வேண்டும் என்று உடன்பாடு ஏற்பட்டது.

வழக்கம் போல்

இதனால், வழக்கம் போல் கடந்த 21-ந் தேதி யூலின்நகரில் கோலாகலமாக நாய்கறி திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவில் எந்தவிதமான அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்துவிடாமல் இருந்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ருசித்து சாப்பிட்ட மக்கள்

இந்த திருவிழாவின் முதல்நாளே நூற்றுக்கணக்கான நாய்கள் கொல்லப்பட்டு, அவற்றில் விதவிதமான உணவை தயாரித்து விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றும், சிலர் அங்கேயே ருசித்தும் சாப்பிட்டனர்.

PREV
click me!

Recommended Stories

சிரியா மசூதியில் பயங்கரம்! தொழுகையின் போது நடந்த கொடூர தாக்குதல்.. 8 பேர் உடல் சிதறி பலி!
கொடூரம்.. தொழுகையில் ஈடுபட்ட பாலஸ்தீனியர் மீது வாகனத்தை ஏற்றிய இஸ்ரேலிய வீரர்!