
அல்ஜீரியாவில் தனது குழந்தையை உயரமான கட்டிடத்தில் இருந்து கீழே போடுவது போன்ற புகைப்படத்தை எடுத்து அதிக லைக் வேண்டும் என்று டுவிட்டரில் பதிவிட்ட தந்தையை போலீசார் கைது செய்தனர்.
அல்ஜீரியாவில் தனது குழந்தையை 15 வது மாடியில் இருந்து ஜன்னலுக்கு வெளியே பிடித்து கீழே போடுவது போல் புகைப்படத்தை எடுத்து 1000 லைக்குகள் வேண்டும், இல்லையென்றால் குழந்தையை கீழே விட்டுவிடுவேன் என்ற வாசகத்துடன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இதை பார்த்த நெட்டிசங்கள் லைக்குகளுக்கு பதிலாக கண்டனத்தையே கமெண்டாக கொடுத்தனர். மேலும் இவ்வாறு பதிவிட்ட அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
தனத்தையே சமூக வலைதளத்தின் மோகத்தால் குழந்தையை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.