லடாக் எல்லையை ஒட்டி இருபுறமும் இரு நாட்டு ராணுவ துருப்புகளும் குவிக்கப்பட்டு இருப்பதால் அங்கு பதற்றம் தொடர்ந்து வருகிறது.
லடாக் எல்லையை ஒட்டி இருபுறமும் இரு நாட்டு ராணுவ துருப்புகளும் குவிக்கப்பட்டு இருப்பதால் அங்கு பதற்றம் தொடர்ந்து வருகிறது.
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ம் தேதி திடீரென்று இந்திய-சீன துருப்புகள் மோதலில் ஈடுபட்டதில் 20க்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். பதிலுக்கு இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதலில் சீனப்படையும் பெரும் சேதமடைந்தது. இந்த மோதல் விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் எல்லையில் நீடித்து வரும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர இருநாட்டு ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இருப்பினும் சீனா ஆக்கிரமிப்பு மனநிலையுடன் எல்லையில் வாலாட்டினால் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு இருப்பதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. 3,488 கி.மீ நீளமுள்ள கட்டுப்பாட்டு வரிசையில் நிலைமை தொடர்ந்து பதற்றமாகவே உள்ளது. இந்திய மற்றும் சீனப் படைகள் அங்கு முழுமையாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இராணுவ பார்வையாளர்கள் சமூக ஊடகங்களில் எல்லையின் இருபுறமும் ஆக்கிரமிப்பின் அளவைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்டு வருகின்றனர். பலரும் அந்தந்தப் படைகளை பழிவாங்குமாறு கேட்டுக் கொண்டு வருகின்றனர். இதுகுறித்து இந்திய ராணுவ முன்னாள் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பழிவாங்கக் கேட்பவர்கள் அனைவரும் போர்க்குணமிக்கவர்கள். இரு அணுசக்தி நாடுகளுக்கிடையேயான ஒரு போர் ஏற்படுத்தக்கூடிய அழிவு பற்றிய எந்த சிந்தனையும் இல்லாதவர்கள்.
ஜூன் 15 அன்று இந்திய அல்லது சீன வீரர்கள் இராணுவ நெறிமுறைக்குக் கீழ்படியாமல் இருந்திருந்தால், அருகிலுள்ள ரோந்துப் புள்ளி 15 மற்றும் 17 இல் அதிக வன்முறையுடன் எல்லை முழுவதும் ஒரு மிகப்பெரிய போர் நிலை ஏற்பட்டிருக்கும்’’என்று கூறினார். இருப்பினும் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.