பூட்டிய அறைக்குள் சீன அதிபரிடம் காலில் விழாத குறையாக மன்றாடிய அமெரிக்க அதிபர் டிரம்ப்... அடுத்த அதிர்ச்சி..!

By Thiraviaraj RMFirst Published Jun 20, 2020, 6:41 PM IST
Highlights

அலறுகிறது அமெரிக்கா. பூட்டிய அறைக்குள் சீன அதிபருடைய காலில் விழாத குறையாக தேர்தலில் வெற்றிபெற மன்றாடினார் அமெரிக்க அதிபர் டிரம்ப் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 

அலறுகிறது அமெரிக்கா. பூட்டிய அறைக்குள் சீன அதிபருடைய காலில் விழாத குறையாக தேர்தலில் வெற்றிபெற மன்றாடினார் அமெரிக்க அதிபர் டிரம்ப் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தி ரோம் இட் ஹேப்பனடு என்கிற ட்ரம்பை பற்றிய புத்தகம் வெளியாக இருக்கிறது. இதனை எழுதியவர் அமஎரிக்க முன்னாள் பாதுகாப்பு படைத்துறை ஆலோசகர் ஜான் போல்டன்.  இந்தப்புத்தகம் வெளிவர இருப்பதை தடுப்பதற்கு அமெரிக்க நீதி அமைச்சகம் மன்றாடி வருகிறது. இந்தத் தகவல் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

 

அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படையாக சீனாவுக்கு எதிராக பேசினாலும்கூட, அவர் உலக ரீதியாக சீனாவிடம் மண்டியிட்டே நடக்கிறார் என அமெரிக்க முன்னாள் படைத்துறை ஆலோசகர் ஜான் போல்டன் அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார். இந்தப் புத்தகம் வருகிற ஜூன் 23-ம் தேதி வெளியாகிறது. இந்த புத்தகத்தில் அமெரிக்க அதிபர் குறித்து இதுவரை வெளியில் வராத மிகப்பெரிய தேச ரகசியங்களை அவர் வெளியிட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வர இருக்கின்ற நேரத்தில் இந்தப் புத்தகம் வெளியாகி வந்தால் அமெரிக்க அதிபரின் வெற்றிக்கு மிகப் பெரிய தடையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர், சீன விவகாரத்தில் மட்டுமல்ல, வடகொரிய விவகாரத்திலும், ஆப்கானிஸ்தான் பிரச்னையிலும் முரண்பட்ட வகையில் நடந்து கொள்வதாக முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் குற்றம் காட்டியிருக்கிறார். ட்ரம்பின் உடைய பல நடவடிக்கைகள் பல அடிப்படை சட்டத்தை மீறுவதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த ஜான் போல்டன் சாதாரணமானவர் அல்ல. முன்னாள் அமெரிக்க அதிபர்கள் ரொனால்ட் ரீகன், ஜார்ஜ் புஷ் உடன் பணியாற்றியவர். இவர் எழுதியிருக்கும் புத்தகமானது அமெரிக்க அதிபரை அருகிலிருந்து பார்த்து வெள்ளை மாளிகைக்கு நடந்தவற்றை இவர் அம்பலப்படுத்தியுள்ளார். சீன அதிபரிடம் பூட்டிய அறைக்குள் காலில் விழாத குறையாக தான் அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட தாங்கள் உதவ வேண்டும் என ட்ரம்ப் மன்றாடியதாக தெரிவித்துள்ளார் ஜான் போல்டன். 

இதன் காரணமாக அமெரிக்கா நீதி அமைச்சகம் இந்த புத்தகம் வெளி வரக்கூடாது என்று அவசர அவசரமாக தடைவிதித்துள்ளது. ஆனாலும் கூட புத்தகம் வெளிவரும் என்று கூறப்படுகிறது. புத்தகம் வெளிவந்தாலும், வெளி வராவிட்டாலும் அதிலிருக்கும் விவகாரங்கள் கசிந்துவிட்ட காரணத்தால் அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

click me!