#UnmaskingChina:சீனாவின் அல்லக்கை நாடு இந்தியாவுக்கு அட்வைஸ்..!அமைதியான முறையில் பிரச்சனையை தீர்க்க வேண்டுமாம்

By Ezhilarasan BabuFirst Published Jun 20, 2020, 6:19 PM IST
Highlights

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள  லிபுலேக், கலபானி மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகள் நேபாளத்திற்கு சொந்தமானவை என்றும், அந்த பகுதிகள்  இந்தியாவிடமிருந்து மீட்டெடுக்கப்படும் என்றும் அதன் பிரதமர் கே.பி. சர்மா ஓலி தீவிரம்காட்டிவருகிறார்.

இரு தரப்பு உறவு மற்றும் ஸ்திரத்தன்மையை மனதில் வைத்து இந்தியாவும், சீனாவும் உண்மையான கட்டுப்பட்டு வரிசையில் எல்லைப் பிரச்சினைகளை அமைதியான  வழிமுறைகளின் மூலம் தீர்த்துக் கொள்வர்கள் என்று தாங்கள் நம்புவதாக நேபாளம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் சில எல்லைப்பகுதிகளில் தனக்குச் சொந்தமானது என புதிய எல்லை வரைபடம் வெளியிட்டு இந்தியாவுக்கு எதிர் நிலைப்பாட்டை எடுத்துள்ள நேபாளம் இவ்வாறு கூறியுள்ளது. கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக இந்திய-சீன எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி,  சீனா எல்லையில் ராணுவத்தை குவித்தது, அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், 

ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை  இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் சீனர்கள் தாக்குதல் நடத்த ஏற்கனவே தயாராக இருந்ததால், பயங்கர ஆயுதங்களை கொண்டு இந்திய ராணுவ வீரர்களை கடுமையாக தாக்கினர். அதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத பேரிழப்பாக இது கருதப்படுகிறது. இந்திய வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 35 சீனர்கள் கொள்ளப்பட்டதாக அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைகளின் மூலம் பிரச்சனை தீர்க்க வேண்டும் என்று கருத்து கூறி வருகின்றன. இந்நிலையில் சீனாவை போலவே அண்டை நாடான நேபாளம்,  இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள  லிபுலேக், கலபானி மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகள் நேபாளத்திற்கு சொந்தமானவை என்றும், அந்த பகுதிகள்  இந்தியாவிடமிருந்து மீட்டெடுக்கப்படும் என்றும் அதன் பிரதமர் கே.பி. சர்மா ஓலி தீவிரம்காட்டிவருகிறார். மேலும் அந்த மூன்று  பகுதிகளையும் தனது எல்லைக்குள் கொண்டு வந்து நேபாளம் புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதை தனது நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றியுள்ள அந்நாடு, இந்தியா உத்தரகாண்ட் மாநிலத்தில் தார்ச்சுலாவுடன் லிபுலேக் பாஸை இணைக்கும் 80 கி.மீ நீளமுள்ள  முக்கியத்துவம் வாய்ந்த சாலையை திறந்து வைத்ததை அடுத்து இந்திய-நேபாள உறவுகள் சீர்குலைந்தன. இந்தியாவின் இந்த சாலை திட்டத்துக்கு நேபாளம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் தங்கள் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி வரும் நேபாளம் இந்தியாவுக்கு எதிராக அதன் எல்லையில் ராணுவத்தை குவித்து வருகிறது. சீனாவின் தூண்டுதலின் பேரில் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் நேபாளம் இந்திய-சீன விவகாரத்தில் அதிரடியாக கருத்து கூறி உள்ளது. அதாவது எங்கள் நட்பும், அண்டை நாடுகளான இந்தியாவும் சீனாவும், நல்ல அண்டை நாடுகளின் மனப்பான்மையில், இருதரப்பு பிராந்திய மற்றும் உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவாக, அமைதியான வழிகளின் மூலம் அவர்களின் பரஸ்பர வேறுபாடுகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என நேபாளம் விரும்புகிறது, என வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!