சிங்கப்பூரில் தொடங்கும், உலகளாவிய தோல் மருத்துவ மாநாடு! 11000 பேர் பங்கேற்பு!

By Dinesh TG  |  First Published Jul 3, 2023, 11:10 AM IST

25வது உலகளாவிய தோல் மருத்துவ மாநாடு இன்று தொடங்கி சனிக்கிழமை வரை சிங்கப்பூரில் உள்ள சன்டெக் மாநாடு மற்றும் கண்காட்சி நிலையத்தில் நடைபெறுகிறது.
 


சிங்கப்பூர், இதுவரை இல்லாத உலகின் மிகப்பெரிய மருத்துவ மாநாட்டை இந்த வாரம் நடத்துகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் சுமார் 28 மில்லியன் வெள்ளி (28 மில்லியன் சிங்கப்பூர் டாலர்) சுற்றுலா வருமானம் கிடைக்கும் என்று சிங்கப்பூர் சுற்றுலாத்துறை எதிர்பார்க்கிறது.

இந்த உலக தோல் மருத்துவ மாநாட்டை நடத்துவதற்கு, ஐந்து நாடுகளின் பெயர்கள் அடிபட்ட நிலையில், இறுதியாக சிங்கப்பூரில் நடைபெறவிருக்கிறது என்று தேசிய தோல் சிகிச்சை நிலையத்தின் மூத்த ஆலோசகரும் 2023ஆம் ஆண்டின் மாநாட்டுத் தலைவருமான பேராசிரியர் ராய் சான் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் தோல் மருத்துவ மாநாடு இன்று (ஜூலை 7) தொடங்கி முதல் சனிக்கிழமை வரை 7 நாட்கள் சிங்கப்பூர் சன்டெக் மாநாட்டு மற்றும் கண்காட்சி நிலையத்தில் நடைபெறுகிறது. இதில் 130 நாடுகளைச் சேர்ந்த 11,000க்கும் மேற்பட்ட மருத்துவ பேராசிரியர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த மாநாட்டின் மூலம், மனித உடலை பாதுகாக்கும் சருமம் தொடர்பான பிரச்சனைகள், சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவ வல்லுனர்களின் உதவியுடன் ஆராயப்பட உள்ளது.

தோல் மருத்துவ மாநாடு முதல் முறையாக 1889-ல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெற்றது. பின்னர், 1982-ல் டோக்கியோவிலும் 2011-ல் சியோல் நகரிலும் நடைபெற்றது. 3வது முறையாக ஆசியாவில் தற்போது இந்த மாநாடு சிங்கப்பூரில் நடைபெறுகிறது.

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மாநாட்டில் சரும நோய் குறித்த அண்மைய ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் குறித்து துறை சாந்த்த சிகிச்சைகளை நிபுணர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்கின்றனர்.

தோல் புற்றுநோய், தோல் தடிப்பு அழற்சி, தோல் மருத்துவம், முடி மற்றும் நகங்களின் நோய்கள், தோல் நிறம் மாறும் கோளாறு, தொற்றுநோய் உட்பட அனைத்து விதமான தலைப்புகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட மருத்துவ பேராசிரியிர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

5.19 மில்லியன்.. 900 நபர்களின் பணத்தை காப்பாற்றிய சிங்கப்பூர் காவல்துறை !!

இன்றையகால இளம் வயதினருக்கு ஏற்படும் முக்கிய பிரச்சனையே முதி உதிர்தல் தான், ‘alopecia areata’ என்று குறிப்பிடப்படும் முடி உதிர்தல் தொடர்பான மருத்துவ சோதனை முடிவுகளும் இந்த மாநாட்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முடி உதிர்வுப் பிரச்சினை ஒரு கட்டத்தில் இரண்டு சதவீத மக்களை பாதிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எந்த வயதிலும் முடி உதர்தல் பிரச்சினை ஏற்படலாம். இருந்தாலும் 20 வயது முதல் 30 வயது வரையிலானவர்களை இது அடிக்கடி பாதிக்கிறது என்பதே உண்மை.

Latest Videos

undefined

சட்டவிரோதமாக வைத்திருந்த 190 லிட்டர் இருமல் சிரப் பறிமுதல்! 6 பேரை கைது செய்து சிங்கப்பூர் போலீசார் விசாரணை!

ஐந்தில் ஒரு குழந்தையைப் பாதிக்கும் வறண்ட சருமம், அரிப்பு, தோல் வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும் எக்ஸிமா பிரச்சினைக்கான புதிய சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்கள் உரையாற்ற உள்ளனர். முகப்பரு மற்றும் வயதான சருமத்திற்கான அதிநவீன சிகிச்சைகள் உள்ளிட்ட தலைப்புகளிலும் நிபுணர்கள் உரையாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி பிளாஸ்டிக் பைகள் இலவசமா கிடைக்காது.. நாளை வரும் மாபெரும் மாற்றம் - சிங்கப்பூர் அதிரடி!

click me!