சிங்கப்பூரில் சூப்பர் மார்க்கெட்களில் பிளாஸ்டிக் பை பெறவேண்டும் என்றால், ஒரு பைக்கு 5 சென்ட் (சிங்கப்பூர் டாலர்) அளிக்க வேண்டியது இருக்கும்.
மனிதனின் கண்டுபிடிப்புகளில் தன்னை தானே மெல்ல மெல்ல அழித்துக் கொள்ளும் ஒரு கண்டுபிடிப்பாக இன்றளவும் கருதப்படுவது தான் மக்குவதற்கு பல கோடி ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் பிளாஸ்டிக் பொருட்கள். அதிலும் கடந்த சில ஆண்டுகளாக இந்த நெகிழிகளை பயன்படுத்தும் கலாச்சாரம் உலக அளவில் கடுமையாக பெருகியுள்ளது.
இந்த பிளாஸ்டிக் பைகள் மண்ணுக்குள் புதைவதால், மேலிருந்து கீழிறங்கும் நீரை சீராக இறங்கவிடாமல் நிலத்தடி நீர் அபாயகரமான அளவில் குறைய வழிவகுக்கிறது. நெகிழிகளால் நிலத்தடி நீர் வளம் அபாயகரமான அளவில் குறைந்து வருவதாக பல ஆய்வின் முடிவுகள் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் அதிகரித்த தற்கொலைகள்! அதிர்ச்சி தகவல்
இந்நிலையில் இந்த பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க, இந்தியா உள்பட உலகின் பல நாடுகளும் பல முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் எந்த ஒரு அறிவியல் விஷயமாக இருந்தாலும் அதில் முன்னோடியாக செயல்படும் சிங்கப்பூர் அரசு நாளை ஜூலை 3ம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளை பெரிய அளவில் கட்டுப்படுத்தும் ஒரு மாபெரும் பயணத்தை துவங்க உள்ளது.
ஆம் நாளை முதல் சிங்கப்பூரில் சூப்பர் மார்க்கெட்களில் பிளாஸ்டிக் பை பெறவேண்டும் என்றால், ஒரு பைக்கு 5 சென்ட் (சிங்கப்பூர் டாலர்) அளிக்க வேண்டியது இருக்கும். இந்த கட்டணமானது பிளாஸ்டிக் பை பயன்பாட்டை குறைக்க அமல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல கடந்த 2007ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை சிங்கப்பூரில் அமலில் இருந்த ஒரு விஷயத்தையும் அந்நாட்டு அரசு சுட்டிக்காட்டி உள்ளது.
அதாவது குறைந்தபட்சம் 10 சிங்கப்பூர் டாலர் செலவழித்து பொருட்களை வாங்கி, அதை பிளாஸ்டிக் பை பயன்படுத்தாமல் தங்களது சொந்த பைகளில் எடுத்துச் செல்பவர்களுக்கு 10 சென்ட் தள்ளுபடி வழங்கும் திட்டம் அமலில் இருந்ததை நினைவூட்டி உள்ளது சிங்கப்பூர் அரசு.
மேற்குறிய அந்த திட்டத்திற்கு மாற்றாக தற்போது வந்துள்ள இந்த முயற்சி தன பிளாஸ்டிக் பை மேலாண்மை திட்டம். பணம் செலுத்தி பைகளை பெறுவதால் நிச்சயம் காலப்போக்கில் மக்கள் தங்கள் சொந்த பைகளை கொண்டு பொருட்களை வாங்க முன்வருவார்கள் என்று ஆலிவர் யுவன் என்ற சிங்கப்பூரின் மூத்த பொருளாதார நிருபர் கூறியுள்ளார்.
இந்த தடையை மீறுபவர்கள், நுர்கவோராக இருந்தாலும் சரி, அது வியாபாரிகளாக இருந்தாலும் சரி அவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் டாக்ஸியாக பயன்படுத்தப்படும் லெக்ஸஸ் சொகுசு கார்!