தாய்லாந்து நாட்டை சேர்ந்த அந்த பெண், பேங்காக் நகரில் இருந்து நக்ஹோன் சி தம்மரெட் என்ற இடத்திற்கு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வேகமாக நகர்ந்து வரும் இந்த டிஜிட்டல் உலகில், மனிதன் விரைந்து செயல்பட உதவும் பல விஷயங்களில் ஒன்று தான் வானூர்திகள். உலகின் பல்வேறு நாடுகளில் லட்சக்கணக்கான விமான நிலையங்கள், கோடிக்கணக்கான பயணிகளை அனுதினமும் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்து சென்று வருகிறது.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக அவ்வப்போது சில நேரங்களில் மிக உன்னிப்பாக கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் விமான நிலையங்களுக்குள்ளும் விபத்துக்கள் ஏற்படத்தான் செய்கிறது. அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
57 வயதான தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், போர்டிங் செய்ய நகரும் படிக்கட்டில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவருடைய கால்கள் நகரும் படிக்கட்டுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டது. உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் வந்து அவரை காப்பாற்றி அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
இதையும் படியுங்கள் : "என்னது கல் உப்பை விட சின்ன சைஸ் பேக்கா"
ஆனால் துரதிஷ்ட விதமாக அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக முழங்கால் வரை அவருடைய கால்களை அகற்றும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த பெண்மணி Bumrungrad International என்ற மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
பேங்காக் நகரில் இருந்து நக்ஹோன் சி தம்மரெட் என்ற இடத்திற்கு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்துவிட்டாலும், அவருக்கு மேற்கொண்டு தொற்று ஏற்படாமல் அவரை மருத்துவர்கள் கவனித்து வருவதாக அந்த பெண்மணியின் மகன் உருக்கமாக கூறியுள்ளார்.
தாய்லாந்து நாடு முழுவதும் விமான நிலையங்களை இயக்கும் அரசுக்கு சொந்தமான ஏர்போர்ட்ஸ் ஆஃப் தாய்லாந்து (ஏஓடி) சார்பாக பேசிய அந்த விமான நிலைய இயக்குனர் கரந்த், அந்த பெண்ணின் அனைத்து மருத்துவ செலவுகளையும் அவர்களே ஏற்பார்கள் என்றும், அந்த பெண்ணுக்கு வேண்டிய இழப்பீடு வழங்கப்படும் என்று கூறினார்.
இதையும் படியுங்கள் : சிங்கப்பூர்காரர்கள் சாப்பிடும் சர்கரை அளவை கடுப்படுத்த முயற்சி!