டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் அருகே யுவால்டே கவுண்டி என்ற நகரில் உள்ள உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு புகுந்த மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட தொடங்கினர். இந்த துப்பாக்கி சூட்டில் 18 குழந்தைகளும், 3 ஆசிரியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், பள்ளி மாணவர்கள் பலர் படுகாயமடைந்தனர்.
undefined
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த நபரை சுட்டுக்கொன்றனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனது குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் கதறி துடித்த காட்சிகள் கண்கலங்க வைத்தது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குழந்தைகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.