ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு டெஸ்லா கார்கள் பாராட்டு தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு டெஸ்லா கார்கள் பாராட்டு தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் இசை அமைப்பாளர் கீரவாணி இசையில் உருவான நாட்டு நாட்டு பாடலுக்கு Best Original Song பிரிவில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை விருதை பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றும் இசை அமைப்பாளர் கீரவாணி ஆகியோர் பெற்றனர்.
இதையும் படிங்க: பஞ்சாப் போலீசாருக்கு பூச்சாண்டி காட்டும் அம்ரித்பால் சிங்; ஐஎஸ்ஐயுடன் தொடர்பா? அதிர்ச்சி தகவல்கள்!
இந்த பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்றிருந்த நிலையில் தற்போது ஆஸ்கர் விருதையும் வென்றுள்ளது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதை அடுத்து பலரும் ஆஸ்கர் விருது வென்றதற்காக பாரட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் டெஸ்லா வித்தியாசமான முறையில் தங்களது பாராட்டை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவை கைவிட்ட இன்டர்போல்! சோக்சியின் ரெட் கார்னர் நோட்டீஸ் வாபஸ்! சிபிஐ அடுத்த பிளான் என்ன?
நியூஜெர்சி மாகாணத்தில் பார்க்கிங்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டெஸ்லா கார்கள் அனைத்தும் இந்த பாடலுக்கு லைட்களை ஒளிரவிட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த பாடலின் தாளத்திற்கு ஏற்ப கார்களில் இருக்கும் லைட்டுகள் ஒளிரவிடப்பட்டன. இதை RRR படக்குழு தங்களின் டிவிட்டரில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளனர்.
Schedule your light show on multiple vehicles simultaneously to create an epic festival of lights! https://t.co/XyhIXTTC0g
— Tesla (@Tesla)