2003 முதல் துருக்கியின் பிரதமராகவும் அதிபராகவும் இருந்துவரும் எர்டோகன் சனிக்கிழமை 3வது முறையாக அதிபராக பதவியேற்கிறார்.
துருக்கிய அதிபர் தையிப் எர்டோகன், சமீபத்திய தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து சனிக்கிழமை மீண்டும் அதிபராக பதவிப் பிரமாணம் செய்துகொள்ள இருக்கிறார். சர்வாதிகாரப் போக்குடன் ஆட்சி நடத்திவந்த அவர் மூன்றாவது முறையாக துருக்கி அதிபர் பதவியை வகிக்க உள்ளார்.
20 ஆண்டுகளாக துருக்கியில் உயரிய அதிகார பதவிகளில் இருந்துவருபவர் எர்டோகன். பிரதமராவும் அதிபராகவும் இருந்திருக்கும் அவர் மீது அந்நாட்டு மக்கள் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறார். அந்நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி, பிப்ரவரியில் நேர்ந்த நிலநடுக்கத்தில் 50 ஆயிரம் பேருக்கு மேல் பலியானபோது மீட்பு நடவடிக்கைகளில் சுணக்கம் காணப்பட்டது போன்ற காரணங்களுக்காக அவரது அரசின் மீது குற்றச்சாட்டுகள் தேர்தலில் பிரதிபலித்தது. இருப்பினும் எர்டோகன் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார்.
69 வயதான எர்டோகன் ஏற்கனவே துருக்கிய குடியரசின் வரலாற்றில் நீண்ட காலம் பணியாற்றிய தலைவர் ஆவார். மீண்டும் ஐந்தாண்டு காலத்திற்கு அவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அவர் 2028ஆம் ஆண்டு வரை ஆட்சியில் நீட்டிக்க உள்ளார். அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மூலம் இன்னும் நீண்ட காலத்திற்கும் அவர் பதவியைக் கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறது.
உஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்ததா? சீன விஞ்ஞானி சொன்ன அதிர்ச்சி தகவல்
1970 களுக்குப் பிள்கு துருக்கியில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து 2002ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடந்த தேர்தலில் அவரது ஏ.கே. கட்சி வெற்றி பெற்றது. அதன் மூலம் 2003ஆம் ஆண்டு எர்டோகன் முதல் முறை பிரதமரானார். 2014 ஆம் ஆண்டில் அவர் நாட்டின் முதல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரானார்.
2017ஆம் ஆண்டு வாக்கெடுப்பில் அதிபர் பதவிக்கான புதிய நிர்வாக அதிகாரங்களைப் பெற்ற பின்னர் 2018ஆம் ஆண்டு மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலிலும் 52.2% வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்திருக்கிறார்.
சனிக்கிழமையன்று நடைபெறும் பதவியேற்பு நிகழ்வுக்குப் பிறகு அவர் துருக்கியின் அமைச்சரவையையும் அவர் மாற்றி அமைக்க உள்ளார். அங்காராவில் அந்நாட்டு நேரப்படி மாலை 3 மணியளவில் பதவியேற்பு நிகழ்வு நடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அமைச்சரவையில் முன்னாள் நிதி அமைச்சர் மெஹ்மத் சிம்செக்கை சேர்ப்பது உறுதி என்று கூறப்படுகிறது. மேலும், வட்டி விகித உயர்வு அறிவிக்கப்பட சாத்தியக்கூறுகள் இருப்பதாவும் சொல்லப்படுகிறது.
உலக வங்கி தலைவராக பொறுப்பேற்றார் அஜய் பங்கா; இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்
சிம்செக் 2009 முதல் 2018 வரை நிதியமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் பணியாற்றியவர். அப்போது முதலீட்டாளர்களால் மிகவும் மதிக்கப்பட்டார். பணவீக்கத்தையும் வட்டி விகிதங்களையும் பல ஆண்டுகளாக திறமையாகக் கையாண்ட அவர் அமைச்சரவையில் இருந்து விலகியது அந்நாட்டின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதில் பின்னடைவாக அமைந்தது.
இச்சூழலில் துருக்கியில் தற்போதைய கொள்கைகள் தொடர்ந்தால், பொருளாதாரம் பெரும் கொந்தளிப்பை நோக்கிச் செல்லும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். தற்போதைய கொள்கைகள் தொடர்ந்தால், பொருளாதாரம் கொந்தளிப்பை நோக்கிச் செல்லும் என்று எச்சரித்துள்ளனர். துருக்கி லிராவின் மதிப்பு சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ச்சியான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. அண்மையில் நடந்த அதிபர் தேர்தலுக்குப் பிந்தைய நாட்களில் வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்தது.
செக்ஸ்-ஐ ஒரு விளையாட்டாக அறிவித்த நாடு! அடுத்த வாரம் சாம்பியன்ஷிப் போட்டி தொடக்கம்..