ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் அவ்வப்போது தற்கொலை படை தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர். இதனால், அப்பாவி பொதுமக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதி குந்தூஸ் மாகாணம் ஆகும். அங்குள்ள பல மாவட்டங்கள் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் திடீரென அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் 15 போலீஸ்காரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் அவ்வப்போது தற்கொலை படை தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர். இதனால், அப்பாவி பொதுமக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதி குந்தூஸ் மாகாணம் ஆகும். அங்குள்ள பல மாவட்டங்கள் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது.
அப்பகுதியில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதால் அப்பகுதிகளில் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அம்மாகாணத்தில் உள்ள அலி அபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு சோதனைச் சாவடியில் தலிபான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அப்போது, தீவிரவாதிகளுக்கு எதிராக போலீசாரும் எதிர்த்தாக்குதல் நடத்தினர். ஒரு மணி நீடித்த துப்பாக்கி சண்டையில் முடிவுக்கு வந்தது. இந்த சண்டையில் 15 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர், மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.