எல்லையில் ஏவுகணைகளை குவிக்கிறது இந்தியா...!! லடாக்கில் இருந்து தாக்க திட்டம்..!! கலக்கத்தில் பாகிஸ்தான்...!!

By Ezhilarasan Babu  |  First Published Oct 22, 2019, 8:37 AM IST

இந்த ஏவுகணைகள்  மிக சிறப்பாக செயல்பட்டு வரும்  நிலையில்,  சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், இன்னும் அதிகமான இவ்வகை ஏவுகணைகளை இந்திய எல்லையான லடாக்கில் நிறுத்திவைக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது.  அதன் மூலம் எதிரிநாடுகளின் வான் வழி ஊடுறுவல்களை தடுக்கவும் அவைகளுக்கு பதிலடி கொடுக்கவும் இந்திய பாதுகாப்புத்துறை திட்டமிட்டுள்ளது.


பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லையை ஒட்டியுள்ள லடாக் மலைச் சிகரத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்காக பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் ஆகாஷ் ஏவுகணைகளை நிறுத்த இந்திய பாதுகாப்புத்துறை திட்டமிட்டுள்ளது.  இந்தியா மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையால்  பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அத்துமீறல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து  பாகிஸ்தான்  இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திவருகிறது,  இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்தியாவின் பதில் தாக்குதலில்  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டுவந்த பயங்கரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. அதில் பதுங்கியிருந்த நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் எல்லையில் அத்துமீறிய 10 பாகிஸ்ரான் ராணுவத்தினர்  கொல்லப்பட்டனர்.  ஆனாலும் பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவை சீண்டிபார்க்கும் வேலைகளில் ஈடுபட்டுவருகிறது. இதனால் இரு நாட்டு எல்லையில்  போர்மேகம் சூழும்  அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் ( டிஆர்டிஓ) தயாரித்துள்ள ஆகாஷ் ஏவுகணைகள் நமது ராணுவத்தில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன.

இந்த ஏவுகணைகள்  மிக சிறப்பாக செயல்பட்டு வரும்  நிலையில்,  சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், இன்னும் அதிகமான இவ்வகை ஏவுகணைகளை இந்திய எல்லையான லடாக்கில் நிறுத்திவைக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது.  அதன் மூலம் எதிரிநாடுகளின் வான் வழி ஊடுறுவல்களை தடுக்கவும் அவைகளுக்கு பதிலடி கொடுக்கவும் இந்திய பாதுகாப்புத்துறை திட்டமிட்டுள்ளது.  சுமார் 15 ஆயிரம் அடி உயரம் கொண்ட லடாக்கில் ஏவுகணைகளை நிறுத்துவதன் மூலம் தீவிரவாதிகளை இலகுவாக கண்காணிப்பதுடன் அவசியம் ஏற்படும் பட்சத்தில் விரைந்து தாக்கவும் ஏதுவாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதற்காக 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உடனே ஏவுகணைகளை வாங்குவதற்கு முடிவு செய்த இந்திய பாதுகாப்புத்துறையின் கொள்முதல் குழு, இந்த முறை ஏவுகணைகளை வெளிநாடுகளில் இருந்து வாங்குவதற்கு பதிலாக,  மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே ஆகாஷ் ஏவுகணைகளை உற்பத்தி செய்ய  முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 

click me!