இந்தியா காட்டிய பாசம், உருகியது பாகிஸ்தான்..!! மோதலில் மலர்ந்த மனிதநேயம்..!!

By Ezhilarasan Babu  |  First Published Oct 21, 2019, 3:30 PM IST

இதனை ஏற்ற எம்பி கௌதம் கம்பீர்,  சிறுமிக்கு ஆபரேஷன் செய்ய விசா வழங்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்தார்.  அவரின்  கோரிக்கையை ஏற்ற வெளியுறவுத்துறை அமைச்சகம் சிறுமியின் குடும்பத்திற்கு விசா வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.  இத் தகவலை கௌதம் கம்பீர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.


பாகிஸ்தானை சேர்ந்த சிறுமிக்கு இந்தியாவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அவருக்கு விசா வழங்க ஒப்புதல் அளிக்க வேண்டுமென இந்திய கிரிக்கெட் வீரரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் கம்பீர் வைத்த கோரிக்கையை இந்திய வெளிவுறவுத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

Latest Videos

பாகிஸ்தானைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி  ஒமாயிமா அலி,  இவர் கடந்த ஓராண்டு காலமாக உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் இதய நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் பாகிஸ்தானுக்கு திரும்பிச்சென்ற நிலையில், மீண்டும் இதய அறுவை சிகிச்சைக்காக அவர் இந்தியா வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விசா கேட்டு அவர் விண்ணப்பித்துள்ள நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே தற்போது நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக அது கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் ஒமாயிமாவுக்கு உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் உள்ளதால்,  பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப் சந்தித்த  அச்சிறுமியின் பெற்றோர்கள்  இந்தியா செல்ல உதவுமாறு கோரினார்.

இதனையடுத்து  கிரிக்கெட் வீரர் முகமது யூசுப் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் கம்பீர் தொடர்பு கொண்டு சிறுமி உமாவின் நிலைமையை எடுத்துக் கூறியதுடன், இந்தியா வர உதவுமாறு கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற எம்பி கௌதம் கம்பீர்,  சிறுமிக்கு ஆபரேஷன் செய்ய விசா வழங்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்தார்.  அவரின்  கோரிக்கையை ஏற்ற வெளியுறவுத்துறை அமைச்சகம் சிறுமியின் குடும்பத்திற்கு விசா வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.  இத் தகவலை கௌதம் கம்பீர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.மற்றும் அது குறித்து பேசியள்ள அவர், இந்தியாவுக்கென்று உள்ளார் பேரன்பை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த உதவியை தாம் செய்ததாகவும்,  பாகிஸ்தான் அரசின் மீது தனக்கு மிகுந்த கோபம் இருந்தாலும்  அந்நாட்டு மக்கள் பாதிக்கப்படுவதில் தனக்கு விருப்பமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

click me!