இம்ரான்கான் முகத்தில் கரிபூசிய பெண் அமைச்சர்..!! பாகிஸ்தானுக்கு அவமானம் என்றும் விமர்சனம்..!!

By Ezhilarasan Babu  |  First Published Oct 22, 2019, 1:28 PM IST

கர்தார்பூர் சாகிப் தரிசனத்திற்கு கட்டணம் வசூலிப்பது கொடூரமானது ஒரு ஏழை பக்தர் இவ்வளவுப் பெரிய தொகையை எப்படி செலுத்துவார்.? பக்தர்களின் இறைநம்பிக்கையிலிருந்து பாகிஸ்தான் வணிகம் செய்ய முயற்சித்துள்ளது.  இந்தக் கட்டணம் பாகிஸ்தான் பொருளாதாரத்தை உயர்த்தும் என்று அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான் கூறியிருப்பது வெட்கக்கேடானது


கர்த்தார்பூர் வரும் சீக்கிய பக்தர்களிடம் 20 டாலர் கட்டணம் வசூலிப்பது வெட்கக்கேடானது என பாகிஸ்தானை  மத்திய அமைச்சர்   ஹர்சிம்ரத் கவுர் கடுமையாக விமர்சித்துள்ளார். 

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ்,  நினைவிடத்தை தரிசிக்க வரும் இந்தியர்களிடம் 20  டாலரை நுழைவு கட்டணமாக வசூலிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதற்கான வரைவு அறிக்கையை இந்திய தூதுரகத்தின் வாயிலாக இந்தியாவிற்கு தெரிவித்துள்ளது பாகிஸ்தான். சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் கடைசி காலத்தில் பாகிஸ்தானிலுள்ள கர்தார்பூர் வாழ்ந்து மறைந்தார். அவர் வாழ்ந்ததற்கு நினைவாக இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரவி நதிக்கரையில் தர்பார் சாஹிப் குருத்வாரா என்ற பெயரில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இந்தியாவிலிருந்து அன்றாடம் குறைந்தது 5 ஆயிரம் சீக்கியர்கள்வரை பாகிஸ்தான் கர்தார்பூருக்குச் சென்று குருநானக் நினைவிடத்தை தரிசித்து வருகின்றனர்.

Latest Videos

 

அத்துடன் ஆண்டுதோறும் அவரது நினைவுதினம் மற்றும் பிறந்த தினத்தில் அவரின் நினைவிடத்திற்கு இந்தியாவிலிருந்து லட்சக் கணக்கில் சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் வரும்  நவம்பர் 9ஆம் தேதி இந்தியாவிலிருந்து, லட்சக்கணக்கான சீக்கியர்கள் அவரது நினைவிடத்திற்கு புனித பயணம்  மேற்கொள்ள உள்ளனர்.  இந்நிலையில் ஏற்கனவே பாகிஸ்தானும் இந்தியாவும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இந்தியாவில் இருந்து  சீக்கியர்கள் எளிதாக புனித பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தேரா பாபா நகரிலிருந்து, சர்வதேச எல்லை வரை செல்ல சிறப்பு பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் எல்லையில் இருந்து கர்தார்பூர் செல்லும் வரை சிறப்பு பாதையை ஏற்கனவே  பாகிஸ்தான் அமைத்துள்ளது. அந்த பாதையை வரும் நவம்பர் 9 ஆம் தேதி குருநானக்கின் 550-ஆவது பிறந்த  தினத்தன்று பாகிஸ்தான் திறக்க உள்ளது. 

இந்நிலையில் அந்த பாதைக்கு 20 டாலர் கட்டணமாக பாகிஸ்தான் வசூலிக்க உள்ளது  இந்நிலையில்  சீக்கியர்களிடம் வசூலிக்கப்படும் பணத்தல் பாகிஸ்தான் பொருளாதாரம் மேம்படும் என்று பிரதமர் இம்ரான் கான் கூறியிருப்பதற்கு இந்திய  ஹர்சிம்ரத் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் வீடியோபதிவிட்டுள்ள அவர் கர்தார்பூர் சாகிப் தரிசனத்திற்கு கட்டணம் வசூலிப்பது கொடூரமானது ஒரு ஏழை பக்தர் இவ்வளவுப் பெரிய தொகையை எப்படி செலுத்துவார்.? பக்தர்களின் இறைநம்பிக்கையிலிருந்து பாகிஸ்தான் வணிகம் செய்ய முயற்சித்துள்ளது. இந்தக் கட்டணம் பாகிஸ்தான் பொருளாதாரத்தை உயர்த்தும் என்று அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான் கூறியிருப்பது வெட்கக்கேடானது என்றும் காட்டமாக கூறியுள்ளார்.

click me!