
ஆப்கானிஸ்தானில் உள்ள ஜெர்மன் நாட்டுத் தூதரகம் மீது தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலில் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள். 34 பேர் படுகாயமடைந்தனர்.
ஜெர்மன் தூதரகத்தின் சுற்றுச்சுவர் மீது வெடி குண்டு நிரப்பிய காரை மோத செய்த தீவிரவாத தற்கொலைப்படையினர், இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தால் அருகில் உள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் சேதம் அடைந்தன. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 32 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
தகவலறிந்து ஆப்கான் பாதுகாப்பு படை ஹெலிகாப்டர் மூலமாகவும் வாகனங்கள் மூலமாகவும் சம்பவ இடத்துக்கு சென்று, உடனடியாக பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்திற்கு ஜெர்மனி கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் வடக்கே உள்ள குண்டூஸ் மாகாணத்தில் செயல்பட்டுவந்த தலிபான் முகாம்கள் மீது அமெரிக்க படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், 30க்கு மேற்பட்ட தலிபான்கள் கொல்லப்பட்டதா கூறப்பட்டது. இதற்கு பழி வாங்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தலீபான்கள் தெரிவித்துள்ளனர்.