டிரம்புக்கு எதிராக 2-வது நாளாக தொடரும் போராட்டம் : அமெரிக்காவில் 25க்கும் மேற்பட்ட நகரங்களில் ஊர்வலம்

 
Published : Nov 12, 2016, 07:55 AM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
டிரம்புக்கு எதிராக 2-வது நாளாக தொடரும் போராட்டம் : அமெரிக்காவில் 25க்கும் மேற்பட்ட நகரங்களில் ஊர்வலம்

சுருக்கம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் ஒரு பிரிவு மக்கள் தொடர்ந்து 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிரம்ப் வெற்றி பெற்றார்.

ஆனால், தேர்தலில் மக்களின் வாக்குகளை , டிரம்பைக் காட்டிலும் ஹிலாரியே அதிகம் பெற்று இருந்தார். ஆனால், வெற்றிக்கு தேவையான 270 தேர்வுக் குழுவினரின் வாக்குகளைப் பெறாததால், அவர் தோல்வி அடைந்தார்.

போராட்டம்

இந்த தோல்வியை ஹிலாரியின் ஆதரவாளர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால், டிரம்ப்பின் வெற்றியை எதிர்த்து நேற்று முன் தினம் மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்தத் தொடங்கினர்.

நியூயார்க், சிகாக்கோ, பிலடெல்பியா, பாஸ்டன், கலிபோர்னியா, கொலராடோ, சீட்டல் உள்ளிட்ட பலநகரங்களில் சாலையில் இறங்கி டிரம்புக்கு எதிராக கோஷமிட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மக்கள் கூட்டத்தைக் கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தைக் கலைத்தனர்.

இந்நிலையில் டிரம்புக்கு எதிராக 2-வது நாளாக நேற்றும் போராட்டம் நடந்தது. ஆயிரக்கணக்காண மக்கள் வெள்ளை மாளிகை மற்றும் டிரம்புக்குச் சொந்தமான கட்டிடங்கள் முன்பும் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். 

நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ, கொலராடோ, லாஸ் ஏஞ்செல்ஸ், சீட்டல் ஆகிய நகரங்களில் மக்கள் டிரம்புக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அதில் ஏராளமான மக்களை போலீசார் கைது செய்தனர்.

அதேசமயம், கலிபோர்னியா நகரில் நடந்த தீவிரமான போராட்டத்தில்  40 ரவுண்டுகளை போலீசார் சுட்டனர். அப்போது போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில், 3 அதிகாரிகள் காயமடைந்தனர். டிரம்புக்கு எதிராக மெழுகு வர்த்தி ஏந்தியும், அவரின் உருவபொம்மையை எரித்தும் மக்கள் போராட்டம் நடத்தினர்.

மேலும், வெள்ளை மாளிகைக்கு வெளியிலும், டிரம்ப்புக்கு சொந்தமான கட்டிங்களுக்கு வெளியிலும் மக்கள் போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

டிரம்ப் குற்றச்சாட்டு

இந்த போராட்டம் குறித்து டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்ட கருத்தில், “ எனக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் தொழில்முறை போராட்டக்காரர்கள். வெற்றிகரமாக அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த சூழலில் ஊடகங்களால், தொழில்முறை போராட்டக்காரர்கள் தூண்டிவிடப்பட்டுள்ளார்கள். இது நியாயமில்லாதது'' எனத் குற்றம்சாட்டினார்.

 

அமைதி தேவை

மக்களின் போராட்டம் குறித்து வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் ஜோஷ் இயர்னஸ்ட் கூறுகையில், “ மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்ட போராட்டம் நடத்தலாம். அதற்கு அரசியலமைப்புச் சட்டம் உரிமை அளித்துள்ளது. ஆனால், அது மிகவும் அமைதியான வழியில் இருப்பது அவசியம். இந்த போராட்டத்தைப் பார்த்து அதிபர் ஒன்றும் வியப்படையவில்லை. அதேசமயம், நாமெல்லாம் அமெரிக்கர்கள், தேசிய உணர்வுடன் இருக்க வேண்டும் '' எனத் தெரிவித்தார்.

உரிமையை பாதுகாக்க வேண்டும்

அமெரிக்க-இஸ்லாமிய தொடர்பின் தேசிய நிர்வாக இயக்குநர் நிகாத் அவாத் கூறுகையில், “ அமெரிக்காவில் உள்ள அனைத்து மக்களின் உரிமையையும் டிரம்ப்மதிக்க வேண்டும். நாட்டை வலிமையாக்க, சிறப்புறச்செய்ய புதிய அதிபர் உறுதி ஏற்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், முஸ்லிம்கள் அமெரிக்காவில் வசிப்பார்கள். அவர்களை மிரட்டி, ஒதுக்க கூடாது. அனைத்து மக்களின் உரிமைகளையும்  புதிய அதிபர் பாதுகாப்பார் என்ற உயர்ந்த நம்பிக்கையை நாங்கள் கொண்டு இருக்கிறோம்'' எனத் தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

ஏசப்பா அந்த புதின் நாச…..போயிடணும்..! கிறிஸ்துமஸ் தினத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்த ஜெலன்ஸ்கி
17 ஆண்டுக்குப் பின் நாடுதிரும்பிய தாரிக் ரஹ்மான்! வங்கதேச அரசியலில் பரபரப்பு!