"நிலா பூமிக்கு பக்கத்துல வரப்போகுது" - அரிதாக நடைபெறும் ‘சூப்பர் மூன்’ நிகழ்வு!

 
Published : Nov 12, 2016, 05:17 AM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
"நிலா பூமிக்கு பக்கத்துல வரப்போகுது" - அரிதாக நடைபெறும் ‘சூப்பர் மூன்’ நிகழ்வு!

சுருக்கம்

விண்வெளியில் கடந்த 69 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இம்முறை 'சூப்பர் மூன்' நிகழ்வு பூமிக்கு வெகு அருகில் நடைபெறவுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நிலவு பூமிக்கு மிக அருகில் வந்து காட்சியளிக்கும் 'சூப்பர் மூன்' நிகழ்வு 13 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், வரும் 14-ம் தேதி இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், கடந்த 69 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இம்முறை நடைபெறவுள்ள சூப்பர் மூன் நிகழ்வின்போது பூமியை நிலவு 64 கிலோமீட்டர் தூரம் நெருங்கி வரவுள்ளதாகவும், இதனால் 3 லட்சத்து 85 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள நிலவை மிகப்பெரிய அளவிலும் பிரகாசமாகவும் நம்மால் காண முடியும் என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வு கடந்தாண்டு டிசம்பர் 14-ம் தேதி கடைசியாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஏசப்பா அந்த புதின் நாச…..போயிடணும்..! கிறிஸ்துமஸ் தினத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்த ஜெலன்ஸ்கி
17 ஆண்டுக்குப் பின் நாடுதிரும்பிய தாரிக் ரஹ்மான்! வங்கதேச அரசியலில் பரபரப்பு!