டிரம்ப் மனைவிக்கு வெள்ளை மாளிகையை சுற்றிக்காட்டிய ஒபாமா மனைவி

First Published Nov 12, 2016, 8:55 AM IST
Highlights


வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த டிரம்பின் மனைவி மெலனியா டிரம்பை, அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா மாளிகை முழுவதையும் சுற்றிக்காண்பித்தார்.

அடுத்த 4 ஆண்டுகளுக்கு இங்குதான் டிரம்ப் குடும்பத்தினர் வசிக்கப் போகிறார்கள் என்பதால், அங்குள்ள அனைத்து அறைகளையும் சுற்றிக் காண்பித்து மெலனியாவுக்கு, மிச்சேல் விளக்கினார்.

இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் ஜோஷ் இயர்னஸ்ட் நிருபர்களிடம் கூறுகையில், “ அதிபர் ஒபாமா, அவரின் மனைவி மிச்சேல் ஒபாமா, அடுத்த அதிபர் டிரம்ப், அவரின் மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் சந்தித்தை நீங்கள் அறிவீர்கள். இவர்கள் தங்களின் பொன்னான நேரத்தை மாளிகையின் ட்டூமென் பால்கனியில் நடந்து செலவு செய்தனர். அடுத்த வரவுள்ள அதிபர் டிரம்புக்குஅனைத்து விஷயங்களையும், மாளிகை குறித்தும் அதிபர் ஒபாமா விளக்கினார்.

இரு அதிபரின் மனைவிகளும் மாளிகையின் பால்கனியில் நடந்து, ஒருவொருக்கொருவர் புரிந்துகொள்ள இது சிறந்த வாய்ப்பாகும். மிச்சேல் ஒபாமாவின் இரு மகள்களும் தங்கள் இளமைக்காலத்தை இந்த மாளிகையில் செலவிட்டனர், அதேபோல, டிரம்ப்பின் இளயமகன் சில ஆண்டுகள், தனது பள்ளிப்பருவத்தை செலவிடுவார்'' எனத் தெரிவித்தார்.

ஹிலாரி மகள் தேர்தலில் போட்டி

பில்கிளிண்டன், ஹிலாரி கிளிண்டனின் மகள்  செல்சீ கிளிண்டன் அமெரிக்க பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரதிநிதிகள்சபை எம்.பி.யாக இருக்கும் 79-வது வயது ஜனநாயக கட்சி  உறுப்பினரும் மூத்த அரசியல் வாதியுமான நிட்டா லோவே ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். ஆதலால்,  நியூயார்க் நகரின் 17-வது மாவட்டம் சார்பில் செல்சீ கிளிண்டன் போட்டியிட உள்ளார்.

நியூயார்க்கில் உள்ள சப்பாக்குவா பகுதியில் வசிக்கும் கிளிண்டன், ஹிலாரியும், தங்கள் வீட்டருகே, 11.6 லட்சம் டாலர் (ரூ.781 கோடி)செலவில் ஒரு புதிய வீட்டை வாங்கினார்.

ஆனால், தற்போது மன்ஹாட்டன் பகுதியில் செல்சீ கிளிண்டன் தனது கணவர் மார்க் மெஸ்பின்ஸ்கி மற்றும் இரு குழந்தைகளான சார்லோட்டி, எய்டன் ஆகியோரிடன் வசிக்கிறார். ஒருவேளை செல்சீனகிளிண்டன் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் சப்பாகுவா பகுதியில் உள்ள குடியேறுவார் எனத் தெரிகிறது.

click me!