தைவானில் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தைவான் நாட்டின் நியூ தைபே நகரில் உள்ள 9 மாடி கொண்ட தனியார் மருத்துவமனையில் 7-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தைவானில் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தைவான் நாட்டின் நியூ தைபே நகரில் உள்ள 9 மாடி கொண்ட தனியார் மருத்துவமனையில் 7-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே அங்கு புகை மண்டலம் சூழ்ந்ததில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இது தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், அந்த மாடியில் இருந்து நோயாளிகளை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் நடைபெறும் மீட்பு நடவடிக்கைகளை அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்பார்வையிட்டு வருகிறது. மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அந்நாட்டு அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.