இந்த ஆண்களுக்கெல்லாம் குழந்தையே பிறக்காதாம்… நல்லா தெரிஞ்சுக்கோங்க !!
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மருத்துவமனைகளில் குழந்தை பேறுக்காக 656 பெண்கள் சிகிச்சை பெற்று வந்தனர். அதற்கான காரணம் குறித்து பாஸ்டனில் உள்ள லிடியா மிங்குயஷ்-அலார்சன் நிறுவனத்தின் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இவர்கள் அனைவரும் 18 முதல் 56 வயது நிரம்பியவர்கள். குழந்தை பேறுக்காக சிகிச்சை பெறும் பெண்களின் கணவன்மார்களிடம் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.'
அப்போது இறுக்கமாக உள்ளாடைகள் அணிந்த ஆண்களின் விந்து பரிசோதிக்கப்பட்டது. அவற்றில் குறைந்த எண்ணிகையிலான உயிரணுக்கள் இருந்தன. அவை விரைவாக சென்று கருமுட்டையை அடையும் தன்மையற்றவையாக இருந்தன என்பது அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது..
அதே நேரத்தில் தளர்வான உள்ளாடை அணிந்த ஆண்களின் விந்து பரிசோதிக்கப்பட்டது. அதில் 25 சதவீதம் உயிரணுக்களின் எண்ணிக்கை 17 சதவீதம் அதிகமாகும். 25 சதவீதம் கூடுதல் வீரிய சக்தி இருப்பதும் கண்டறியப்பட்டது.
அவர்கள் அனைவரும் குழந்தை பாக்கியம் உள்ளவர்களாகவும் இருந்தனர். விந்து உற்பத்திக்கு உடலின் வெப்ப நிலை 3 முதல் 4 டிகிரிக்கு கீழே இருக்க வேண்டும். ஆனால் இறுக்கமாக உள்ளாடை அணியும் ஆண்களின் விரைப்பையில் வெப்பத்தை அதிகரித்து விந்து உற்பத்தியை குறைக்கிறது.
அதே நேரத்தில் தளர்வாக உள்ளாடை அணியும் ஆண்களின் விரைப்பையில் வெப்பத்துக்கு பதிலாக குளிர்ச்சியை ஏற்படுத்தி விந்து உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. இதுவே இவர்களின் குழந்தை பேறுக்கு முக்கிய காரணமாக அமைகிறது என்பது அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது..
எனவே இறுக்கமான உள்ளாடை அணியும் ஆண்களுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான தகவல்கள் மனித உற்பத்தி என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சி முடிவின் கருத்துக்களை மருத்துவ நிபுணர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.