மீண்டும் தைவானை சுற்றி வளைத்த சீன ராணுவம்! தைவான் அரசு கண்டனம்

By SG Balan  |  First Published Jan 9, 2023, 12:40 PM IST

சீன ராணுவம் மீண்டும் தங்கள் நாட்டைச் சுற்றிப் போர் பயிற்சியில் ஈடுபடுவதை தைவான் அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது.


சீனா அவ்வப்போது தைவானைச் சுற்றி வளைத்து போர் பயிற்சியை நடத்திவருகிறது. சீனா தைவானச் சுற்றி நடத்தும் போர்ப்பயிற்சி போருக்கான ஒத்திகை என்று தைவான் குற்றம்சாட்டுகிறது.

இந்நிலையில், மீண்டும் சீனா தனது ராணுவத்தை அனுப்பி தைவான் தீவுகளைச் சுற்றி போர்ப் பயிற்சி நடத்திவருகிறது. இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள தைவான் அரசு, சீன ராணுவத்தைச் சேர்ந்த 57 போர் விமானங்கள் தைவானைச் சுற்றி வலம் வருகின்றன எனவும் கூறியுள்ளது.

Latest Videos

undefined

கடந்த ஒரு மாத காலத்துக்குள் இரண்டாவது முறையாக சீனா தைவான் தீவுகளைச் சுற்றி போர் பயிற்சியை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓராண்டு கட்டாய ராணுவப் பணி: சீனாவை எதிர்க்க தைவான் திட்டம்!

1949ஆம் ஆண்டில் முடிவுற்ற சீன உள்நாட்டுப் போருக்குப் பின் தைவான் தனி நாடாக உருவானது. ஆனால், சீனா தைவான் மீது தொடர்ந்து உரிமை பாராட்டி வருகிறது. பிற நாடுகள் தைவானுடன் நட்புறவு கொள்வதையும் சீனா எதிர்க்கிறது. தேவைப்பட்டால் தைவானை போர் மூலம் முழுமையாகக் கைப்பற்றவும் சீனா ஆயத்தமாக உள்ளது.

அமெரிக்கா தைவான் இடையேயான நல்லுறவு மேம்பட்டு வருவது சீனாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் அப்போதைய அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்குச் சென்றது, தைவான் - அமெரிக்கா இடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கும் அமெரிக்க அரசின் சட்ட மசோதா ஆகியவை சீனாவை கோபமடைய வைத்ததுள்ளன.

click me!