மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு செனகல். இந்நாட்டின் கப்ரினி நகரில் நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த இரண்டு பேருந்துகள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 40 பயணிகள் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு செனகல். இந்நாட்டின் கப்ரினி நகரில் நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த இரண்டு பேருந்துகள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 40 பேர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிததாபமாக உயிரிழந்தனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்
இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும், மீட்பு குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரதுது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விபத்து தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் டயர் வெடித்ததில் கட்டுபாட்டை இழந்த பேருந்து சாலையின் எதிரே வந்த மற்றொரு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.