பாகிஸ்தானின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த அந்நாட்டு அமைச்சர் ஒருவர் தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிஃப் இந்த வாரம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது மக்கள் தொகை அதிகரிப்பு குறித்த தனது கருத்து மூலம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியிருக்கிறார்.
நைலா இனாயத் என்ற பத்திரிக்கையாளர் ட்விட்டரில் பகிர்ந்த வீடியோ சர்ச்சையை உருவாக்கி உள்ளது. அந்த வீடியோவில், கவாஜா ஆசிஃப், பாகிஸ்தானில் 8 மணிக்கு மேல் தம்பதிகள் குழந்தை பெற உறவு வைத்துகொள்ளக்கூடாது. எந்த நாட்டில் எல்லாம் 8 மணிக்கு மேல் கடைகள் இருக்காதோ அங்கு எல்லாம் மக்கள் தொகை குறைவாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க..ஒரு நபரின் கையில் ஒட்டுமொத்த திரையரங்குகளா? உதயநிதி ஸ்டாலினை சீண்டிய திருமாவளவன்.. பயங்கர ட்விஸ்ட்!!
New research, babies can’t be made after 8pm. “There’s no population increase in countries where markets close at 8pm,” defence minister. pic.twitter.com/G5IUAuOYD6
— Naila Inayat (@nailainayat)இதுகுறித்து ட்விட்டரில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ஒருவர், இது பாகிஸ்தான் அரசின் ஆராய்ச்சியின் அற்புதமான கண்டுபிடிப்பு. இது மனிதகுலத்திற்கு ஒரு மேதையின் பங்களிப்பு. உலகின் அறிவியல் ஆராய்ச்சித் துறையின் உயரிய விருதை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.
நாடு முழுவதும் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் சந்தைகளின் நேரம் முறையே இரவு 10 மணி மற்றும் இரவு 8:30 மணி வரை மட்டுமே இருக்கும். இந்தத் திட்டம் தேசத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்க முறைகளை மாற்றி, 60 பில்லியன் ரூபாயை மிச்சப்படுத்தும்.
பாகிஸ்தானின் எரிசக்தித் தேவைகள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. எண்ணெய் இறக்குமதியில் அமெரிக்க டாலர்களை செலவழிக்க வேண்டிய அவசியமில்லை என எரிசக்தியை சேமிக்க வேண்டிய கட்டாய நிலையில் நாடு காணப்படுகிறது.
குறைந்த வளர்ச்சி, உயர் பணவீக்கம் மற்றும் மோசமான அந்நிய கையிருப்பு போன்றவற்றால் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான போராட்டத்தின் மத்தியில் நாடு பொருளாதார நெருக்கடியின் மத்தியில் உள்ளது. அமைச்சரின் இந்த பேச்சு உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..2024 நாடாளுமன்ற தேர்தல்; அதிமுக - பாஜக கூட்டணி உறுதியா? அண்ணாமலை கொடுத்த ஷாக் அப்டேட் !!