இந்தியாவில் தயாரிக்கப்படும் ஜெனரிக் மருந்துகளுக்கு சீனாவில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது, அதன்விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இந்தியத் தயாரிப்பில் போலிகள் வருவதால் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஜெனரிக் மருந்துகளுக்கு சீனாவில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது, அதன்விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இந்தியத் தயாரிப்பில் போலிகள் வருவதால் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்தியதைத் தொடர்ந்து அங்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தினசரி லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவில் பாதிக்கப்படுகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழக்கிறார்கள் என்று தகவல்கள் வந்தாலும், அரசிடம் இருந்து அதிகாரபூர்வத் தகவல் இல்லை.
சீனாவில் தயாரிக்கப்பட்டும் கொரோனா தடுப்பூசி வீரியம் குறைந்தது என்பதால்தான் 4 டோஸ்வரை செலுத்தியும் மீண்டும் நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் செட்டிலாகும் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே?
அதுமட்டுமல்லாமல் சீன மக்களிடையே தடுப்பூசி செலுத்தும் விழிப்புணர்வும் குறைவு என்பதாலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியை வாங்கி பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஜெனரிக் மருந்துகளுக்கு சீனாவில் விலை உயர்ந்து கிராக்கி ஏற்பட்டுள்ளது.
சீன தேசிய சுகாதாரப் பாதுகாப்பு நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் “ பைஸர் நிறுவனத்தின் பேக்லோவிட் எனும் வாய்வழியாக எடுத்துக்கொள்ளப்படும் கொரோனா தடுப்பூசி, அடிப்படை மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்படவில்லை.
இந்த நிறுவனத்தின் தடுப்பூசி விலை அதிகமாக இருக்கிறது. பேக்ஸ்லோவிட் மருந்தின் பற்றாக்குறையால், இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளுக்கும், ஜெனரிக் மருந்துகளுக்கும் அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
டோக்கியோவை விட்டு வெளியேறும் பெற்றோருக்கு ரூ.6.20 லட்சம் பரிசு: ஜப்பான் அரசு வழங்க காரணம் என்ன?
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஜெனரிக் கோவிட் மருந்துகளான ப்ரிமோவிர், பாக்ஸிட்டா, மோல்னுநாட், மோல்நாட்ரிஸ் ஆகியவை கடந்த வாரம் விற்பனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
பேஸ்லோவிட் மருந்தைப் போலவே பிர்மோவிர் மற்றும் பேக்ஸிட்டா ஜெனரிக் மருந்துகளாகும். இந்த 4 மருந்துகளையும் அவசரத் தேவைக்குப் பயன்படுத்தலாம் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், சீனாவில் சட்டப்பூர்வ அனுமதியில்லை.
பெய்ஜிங் நினைவு மருந்துத்துறையின் தலைவர் ஹி ஜியாபிங் , சிக்ஸ்த் டோன் இதழுக்கு அளித்த பேட்டியி்ல் “ கோவிட் மருந்துகளை விலை குறைவாகவும் அதேசமயம், நம்பக்கத்தன்மையுடனும், பக்கவிளைவுகள் இல்லாமல் இருக்கும் மருந்துகளை இந்தியாவில்தான் வாங்க முடியும்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஜெனரிக் மருந்துகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதையடுத்து, அந்த மருந்துகளின் ஒத்த பெயரில் போலி மருந்துகள் சீனாவில் வலம் வருகின்றன. இது நோயாளிகளின் உடல்நிலையை கடுமையாகப் பாதிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்
ஆப்கனில் பெண்கல்விக்கான தடையை நீக்க ஐ.நா. வலியுறுத்தல்
இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் மருந்துப் பொருட்களுக்கு வரியைக் குறைக்கக் கோரி சீனாவிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை குறையும் என அரசு நம்புகிறது.
சீனாவில் ஒரு நேரத்தில் இந்தியாவில் இருந்து தயாரிக்கப்படும் புற்றுநோய்க்கான மருந்துகள் அதன் செயல்திறன் மற்றும் விலை குறைவால் கடும் கிராக்கியாக விற்பனையாதும் குறிப்பிடத்தக்கது.