“பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம்..” இந்தியாவில் இருக்கும் தனது குடிமக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை..

Published : Dec 27, 2023, 08:38 AM IST
“பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம்..” இந்தியாவில் இருக்கும் தனது குடிமக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை..

சுருக்கம்

டெல்லி தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு இந்தியாவில் இருக்கும் இஸ்ரேலிய மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்துள்ளது.

டெல்லியில் உள்ள சாணக்கியபுரி தூதரக வளாகத்தில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே செவ்வாய்கிழமை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகில் அமைந்துள்ள மத்திய இந்தி பயிற்சி நிறுவனத்திற்கு வெளியே உள்ள பச்சை நிற பெல்ட் பகுதியில் குண்டு வெடிப்பு நடந்த உடனேயே, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, வெடிகுண்டு செயலிழப்பு படை மற்றும் தீயணைப்புத் துறையின் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் தேடுதல் வேட்டை நடைபெற்றது. தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குழுவும் அந்த இடத்தை ஆய்வு செய்தது என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, தூதரகம் மற்றும் பிற இஸ்ரேலிய நிறுவனங்களைச் சுற்றி பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு "பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம்" என்று சந்தேகிக்கும் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்தியாவில் உள்ள தனது குடிமக்களுக்கு பயண ஆலோசனையை வழங்கியுள்ளது. 

இஸ்ரேலிய தூதரக செய்தித் தொடர்பாளர் Guy Nir இதுகுறித்து பேசிய போது, "மாலை 5:48 மணியளவில் தூதரகத்திற்கு அருகாமையில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும். டெல்லி காவல்துறை மற்றும் பாதுகாப்புக் குழுவினர் நிலைமையை இன்னும் ஆராய்ந்து வருகின்றனர்." என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்தியாவில் வசிக்கும் இஸ்ரேலிய மக்களுக்கு அந்நாட்டின் பாதுகாப்பு சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. அதன்படி, இந்தியாவில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரித்துள்ளது. எனவே நெரிசலான இடங்கள் (மால்கள் மற்றும் சந்தைகள்) மற்றும் மேற்கத்தியர்கள்/யூதர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு சேவை செய்யும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தி உள்ளது. மேலும் பொது இடங்களில் (உணவகங்கள், ஹோட்டல்கள், பப்கள் உட்பட) அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் இஸ்ரேலிய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மும்பையில் 11 வெடிகுண்டுகள்.. ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல்.. பெரும் அதிர்ச்சி.!!

இஸ்ரேலிய சின்னங்களை வெளிப்படையாகக் காண்பிப்பதைத் தவிர்க்கவும், பாதுகாப்பற்ற பெரிய அளவிலான நிகழ்வுகளில் கலந்துகொள்வதைத் தவிர்க்கவும், சமூக ஊடகங்களில் பயணத் திட்டங்களை வெளியிடுவதைத் தவிர்க்கவும் மற்றும் நிகழ்நேரத்தில் வருகையின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம், செவ்வாய்கிழமை வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்று கூறியது. "இந்த சம்பவம் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் முழு ஒத்துழைப்புடன் விசாரணைக்கு உட்பட்டுள்ளது" என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், இஸ்ரேலியர்கள் தங்கள் வெளிநாட்டு பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு இஸ்ரேலிய பாதுகாப்பு கவுன்சில் எச்சரித்தது. இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிக் குழுவிற்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில், உலகெங்கிலும் அதிகரித்து வரும் யூத எதிர்ப்புக்கு மத்தியில் தங்கள் யூத மற்றும் இஸ்ரேலிய அடையாளங்களை வெளியில் காட்டுவதைத் தவிர்க்குமாறு வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய இஸ்ரேலியர்களுக்கு அழைப்பு விடுத்தது.

கடந்த காலங்களிலும், புதுதில்லியில் இஸ்ரேலிய தூதரகம் அருகே பல குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 2021 இல் இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே ஒரு குண்டு வெடிப்பு ஏற்பட்டது, அதில் கார்கள் சேதமடைந்தன, ஆனால் உயிரிழப்புகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அதே போல் பிப்ரவரி 2012 இல், தூதரகத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு ஊழியர் ஒருவரின் மனைவி புது தில்லியில் அவரது கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தொடங்கியதில் இருந்து டெல்லி உள்ள இஸ்ரேல் தூதரகத்தை சுற்றி அதிக பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜப்பானை உலுக்கிய 7.5 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!
பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!