ப்ரியான் என்ற புரதப்பொருளின் வளர்ச்சியின் மூலம் பரவும் நாள்பட்ட கழிவு நோய் (CWD) எனப்படும் 'ஜாம்பி மான் நோய்' குறித்து விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று பரவத்தொடங்கிய பிறகு பல்வேறு புதிய நோய்கள் உருவாகி வருகின்றன. இந்த நிலையில் ப்ரியான் என்ற புரதப்பொருளின் வளர்ச்சியின் மூலம் பரவும் நாள்பட்ட கழிவு நோய் (CWD) எனப்படும் 'ஜாம்பி மான் நோய்' குறித்து விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் வயோமிங் மாகாணத்தில் உள்ள Yellowstone தேசிய பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மான் சடலம் கடந்த மாதம் மூளை பாதிப்பை ஏற்படுத்தும் ப்ரியான் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஆரோக்கியமான மூளை புரதங்கள் ப்ரியான் மூலம் அசாதாரணமாக அதிகரிக்கிறது. இது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நோய்களை உண்டாக்கும் ஆற்றல் கொண்டது. இந்த தொற்று நோய்கள் பாதிக்கப்பட்ட இறைச்சியை உட்கொள்வதன் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடும்.
PRION disease: coming to a brain near you, soon.
What causes prion disease? Prion diseases occur when normal prion protein, found on the surface of many cells, becomes abnormal and clump in the brain, causing brain damage. This abnormal accumulation of protein in the brain can… pic.twitter.com/zzyr3sMKFG
டிமென்ஷியா (மூளை நோய் அல்லது காயம் மற்றும் நினைவாற்றல் குறைபாடுகள், ஆளுமை மாற்றங்கள் மற்றும் பலவீனமான பகுத்தறிவு ஆகியவற்றால் ஏற்படும் மன செயல்முறைகளின் நீண்டகால அல்லது தொடர்ச்சியான கோளாறு), மாயத்தோற்றம், நடக்க மற்றும் பேசுவதில் சிரமம், குழப்பம், சோர்வு மற்றும் தசை விறைப்பு ஆகியவை இந்த ப்ரியான் நோய்களின் அறிகுறிகளில் அடங்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மான்களை பாதிக்கும் ப்ரியான் நோய் வட அமெரிக்க மக்கள் தொகையில் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் காரணமாக ஜாம்பி போன்று நடப்பதால், ஆராய்ச்சியாளர்கள் இதை 'ஜாம்பி மான் நோய்' என்று அழைத்தனர். இந்த நோய் நீண்ட காலமாக மான்களை பாதிக்கும் என்று அறியப்படுகிறது. கடந்த மாதம் Yellowstone தேசிய பூங்காவில் இருந்த மான் ஒன்றுக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இதை தொடர்ந்து இந்த ஆபத்தான நோய் என்றாவது ஒரு நாள் மனிதர்களுக்கு பரவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்களிடையே கவலையை எழுப்பி உள்ளது..
இந்த வகை ப்ரியான் நோய் தடுமாறல், எடை இழப்பு, சோம்பல் மற்றும் பிற நரம்பியல் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது என்று அமெரிக்க நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.. இந்த ப்ரியான் நோய் வட அமெரிக்கா, நார்வே, கனடா மற்றும் தென் கொரியாவில் உள்ள மான், கலைமான் போன்ற மான் வகைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
Damn, Rudolph caught the zombie deer disease 💀 pic.twitter.com/vdEZr9aHyh
— Creepy.org (@CreepyOrg)
தற்போது இந்த ஜாம்பி மான் நோய் வேகமாக பரவவில்லை என்றாலும், அது வரும் காலத்தில் பரவாது என்று அர்த்தம் இல்லை என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். நாட்பட்ட கழிவு நோய் என்பது ஆபத்தான நரம்பியல் கோளாறுகளின் தொகுப்பாகும் என்று தொற்று நோய் ஆராய்ச்சி மற்றும் கொள்கை மையத்தின் (CIDRAP) திட்ட இணை இயக்குநர் டாக்டர். கோரி ஆண்டர்சன் கூறினார். இதேபோன்ற நிகழ்வின் சாத்தியம் குறித்து விஞ்ஞானிகள் விவாதித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் ஜாம்பி மான் நோயை ஒழிக்க அறியப்பட்ட பயனுள்ள வழி எதுவும் இல்லை என்று கூறிய அவர், நோயுற்ற விலங்குகளிடமிருந்தோ அல்லது அவற்றால் மாசுபட்ட சுற்றுச்சூழலிலிருந்தோ அதை அகற்ற முடியாது என்றும் தெரிவித்தார்.
கடுமையான தலைவலிக்காக சிகிச்சைக்கு சென்ற பெண்.. பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்..
இந்த செய்தி குறித்து நெட்டிசன்கள் கலவையான எதிர்வினைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.. ஜாம்பி மான் நோய் மனிதர்களுக்கு பரவினால், அது கோவிட்-19 போன்ற மற்றொரு தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்று பலர் அஞ்சுகின்றனர். ஆனால் சிலர் இந்த நோய் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது என்று நம்புகின்றனர்.