தங்களை வேவு பார்ப்பதற்காக ரஷ்யா ஒரு திமிங்கலத்துக்கு பயிற்சி கொடுத்து நார்வீஜியன் கடல் பகுதியில் உளவாளியாக பயன்படுத்தி வருகிறது என ஸ்வீடன் புகார் கூறுகிறது.
ரஷ்ய உளவாளிகள் பற்றிய நூதனமான வதந்திகளும் தகவல்களும் இரண்டாம் உலகப்போர் காலத்தில் இருந்தே அதன் அண்டை நாடுகளை மிரட்டி வருகின்றன. அந்த வகையில் நான்கு ஆண்டுகளுக்கு முன் ஸ்வீடனை மிரட்டிய ரஷ்ய உளவாளி திமிங்கலம் ஒன்று மீண்டும் ஸ்வீடனை அச்சுறுத்த வந்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூட அந்நாட்டின் முன்னாள் உளவாளிதான். அவர் ரஷ்ய அதிபராக ஆனதில் இருந்து ரஷ்ய உளவுத்துறையின் பலம் கூடிக்கொண்டே வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் ரஷ்யாவால் கையாளப்படும் உளவாளிதான் இந்தத் வெண் திமிங்கலம் என்று ஸ்வீடன் கருதுகிறது.
9 ஆண்டுகள், 9 சாதனைகள்: பிரதமர் மோடி அரசு செயல்படுத்திய 9 சிறந்த திட்டங்கள்
இந்த உளவுத் திமிங்கலம் பெரும்பாலும் ஆழ்கடல்களில் காணப்படக்கூடிய மிகப்பெரிய திமிங்கல வகையைச் சேர்ந்தது. இந்த வகையான வெண் திமிங்கலத்தை ஆழம் குறைவான கடற்கரைப் பகுதிக்கு அருகில் பார்ப்பது மிகவும் அபூர்வம். இந்நிலையில், ஸ்வீடன் நாட்டின் கடலோரப் பகுதிகளில் வெண் திமிங்கலம் ஒன்று அவ்வப்போது தலைகாட்டி மறைவது அந்நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை, ஸ்வீடனின் தென்மேற்கு கடற்கரையில் ஹன்னெபோஸ்ட்ராண்டில் இந்தத் திமிங்கலம் காணப்பட்டது. இதனால், ஸ்வீடனின் கடலோரப் பகுதிகளை வேறு பார்ப்பதற்காக ரஷ்ய உளவுத்துறை திமிங்கலத்தை ரோந்துப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது என்று ஸ்வீடன் தரப்பு சந்தேகிக்கிறது.
பதக்கங்களை கங்கையில் வீசி எறிவோம்: டெல்லியல் போராடும் மல்யுத்த வீரர்கள் வெளியிட்ட உருக்கமான கடிதம்
இதற்கு முன் 2019ஆம் ஆண்டு ஸ்வீடன் கடல் பகுதியில் காணப்பட்ட இந்தத் திமிங்கலம் 4 ஆண்டு கழித்து தற்போது மீண்டும் எட்டிப் பார்த்திருக்கிறது. Hvaldimir என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெள்ளைத் திமிங்கலத்துக்கு வளர்ப்புப் பிராணிகளுக்குக் கட்டுவது போன்ற கழுத்துப் பட்டை ஒன்று போடப்பட்டுள்ளது. இதனால்தான் இது ரஷ்ய உளவாளி திமிங்கலம் என ஸ்வீடன் சொல்கிறது.
நார்வீஜியன் கடல் பகுதியில் தென்படும் இந்தத் திமிங்கலம் 13-14 வயது மதிக்கத்தக்கதாக இருக்கலாம், ரஷ்ய கடற்படை இந்தத் திமிங்கலத்துக்கு உளவுப் பயிற்சி கொடுத்து பயன்படுத்துகிறது, திமிங்கலத்தின் கழுத்துப் பட்டையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என்றெல்லாம் ஸ்வீடன் புகார் கூறுகிறது. ஆனால் இதுவரை ரஷ்யா தரப்பில் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதிகாரபூர்வமான எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் சிறையில் 2 மாதங்களில் 4 இந்திய மீனவர்கள் மரணம் - ஏன்? பதறவைக்கும் திகில் தகவல்கள்.!