
பாகிஸ்தான் சிறையில் இருந்த இந்திய மீனவர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். ஒரு மாதத்தில் பாகிஸ்தான் காவலில் இறந்த மூன்றாவது இந்திய மீனவர் ஆவார்.
அதுமட்டுமின்றி, இரண்டு மாதங்களில் நான்காவது இந்திய மீனவரும் ஆவார். கடந்த இரண்டு மாதங்களில் இறந்த மற்ற இந்திய மீனவர்கள் பிச்சான் குமார் என்ற விபன் குமார் (ஏப்ரல் 4 அன்று இறந்தார்), சுல்பிகர் (மே 6 அன்று இறந்தார்), மற்றும் சோம தேவா (மே 8 அன்று இறந்தார்). பாகிஸ்தானில் உள்ள மேலும் 3 இந்திய மீனவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதையும் படிங்க..ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை.. தமிழகத்தில் எத்தனை நாள் தெரியுமா?
தற்போது வந்துள்ள செய்திகளின்படி, கைதிகள் தண்டனை முடிந்த பிறகும் 400க்கும் மேற்பட்ட இந்திய கைதிகளை பாகிஸ்தான் அரசு தனது சிறைகளில் சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளது. இதுகுறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் ஜதின் தேசாய், இது ஒரு சோகமான நிலையாகும். பாகிஸ்தானின் பிடியில் உள்ள இந்திய மீனவர்களின் குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.
தகவல் தொடர்பு இல்லாத நிலையில், பாகிஸ்தானின் சிறைகளில் இருக்கும் தங்களுக்கு நெருக்கமானவர்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள். இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கள் சொந்த கைதிகளை பரிசோதிக்க மருத்துவர்கள் குழுவை மற்ற நாட்டிற்குச் செல்ல அனுமதிக்க வேண்டும். இது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஓரளவு நம்பிக்கையை அளிக்கும் என்று தேசாய் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இது மிகவும் பயங்கரமானது. தண்டனை முடிந்து, குடியுரிமை உறுதி செய்யப்பட்ட பிறகும், அவர்களை சிறைகளில் வைத்திருப்பது தூதரக அணுகல் ஒப்பந்தம், 2008-ஐ மீறுவதாகும். தூதரக அணுகல் ஒப்பந்தம், 2008 இன் பிரிவு 5 இன் படி, இரு அரசாங்கங்களும் நபர்களை அவர்களின் தேசிய அந்தஸ்தை உறுதிசெய்து தண்டனைகளை முடித்த ஒரு மாதத்திற்குள் அவர்களை விடுவித்து, திருப்பி அனுப்ப ஒப்புக்கொள்கின்றன” என்று கூறினார் ஜதின் தேசாய்.
இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?