கிம் ஜாங் உன்னின் சர்வாதிகார ஆட்சி நடைபெறும் வட கொரியாவில் வீட்டில் பைபிள் வைத்திருந்தற்காக பிறந்து 2 மாதமே ஆன குழந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வட கொரிய நாட்டில் கிம் ஜாங் உன் சர்வாதிகார ஆட்சி நடந்துவருகிறார். அரசு நாட்டு மக்கள் மீது பல கொடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அட்டூழியம் செய்து வருகிறது. ஊடகங்களுக்கும் கடுமையான கெடுபிடி இருப்பதால் அந்நாட்டு நிகழ்வுகள் குறித்த தகவல் அபூர்வமாகவே வெளி உலகிற்குத் தெரிகின்றன.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று இடம்பெற்றுள்ளது. 2022ஆம் ஆண்டில் சர்வதேச மத சுதந்திரம் என்ற தலைப்பில் அமெரிக்கை வெளியுறவுத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்தச் சம்பவம் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
40 முதலைகளால் கொல்லபட்ட முதியவர்! கம்போடியா பண்ணையில் நடந்த பயங்கரம்!
75 ஆயிரம் கிறிஸ்தவர்களை வட கொரிய அரசு கைது செய்து முகாம்களில் அடைத்து வைத்துள்ளது. 2009ஆம் ஆண்டில் வீட்டில் பைபிள் வைத்திருந்தது குற்றம் என்று பலரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களில் பலருக்கு மரண தண்டனையை நிறைவேற்றப்பட உள்ளதாகக் தெரிகிறது.
குறிப்பாக, 2 மாத கைக்குழந்தையக்கூட கைது செய்து ஆயுள் தண்டை விதித்துள்ளனர் என்று அமெரிக்க அறிக்கையில் சொல்லப்படுகிறது. இவர்கள் அடைக்கப்பட்டுள்ள முகாம்களில் மிகவும் மோசமாக துன்புறுத்தப்படுகின்றனர் என்றும் அதில் தெரிவிக்கபடுகிறது. கிறிஸ்தவர்களுக்கு எதிரான இந்த மனித உரிமை மீறலுக்கு பெரும்பாலும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகமே பொறுப்பாக இருக்கிறது என்றும் அமெரிக்க அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
தலைக்கு தில்ல பாத்தியா.. வெறும் கையில் ராட்சத பாம்பை பிடித்த நபர்.. நீங்களே வீடியோவை பாருங்க..
கொரியா ஃபியூச்சர் என்ற இலாப நோக்கற்ற அமைப்பின் அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ள வெளியுறவுத்துறை, வட கொரிய அரசாங்கம் மத நடைமுறைகளில் ஈடுபடும், மதப் பொருட்களை வைத்திருக்கும், மதத் தொடர்பு கொண்ட நபர்களை துன்புறுத்துகிறது என்றும் தெரிவிக்கிறது.
மதச் செயல்பாடுகளில் ஈடுபடுவோர் கைது செய்யப்படலாம், காவலில் வைக்கப்படலாம், கடுமையான வேலைகளைச் செய்ய கட்டாயப்படுத்தப்படலாம், சித்திரவதை செய்யப்படலாம், அவர்களுக்கு நியாயமான விசாரணை மறுக்கலாம், நாடு கடத்தப்படலாம், வாழ்வதற்கான உரிமை மறுக்கப்படலாம், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படலாம் என்றும் கொரியா ஃபியூச்சர் அறிக்கை கூறுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
அணுஆயுத நிலைநிறுத்தம் குறித்து எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் - அமெரிக்காவை கலாய்த்த ரஷ்யா