பயங்கரவாதிகளைப் பத்திரமாக பாதுகாக்கும் பாகிஸ்தான்..! சுஷ்மா ஸ்வராஜ் கடும் தாக்கு..!

First Published Oct 25, 2017, 3:43 PM IST
Highlights
sushma swaraj alleged pakistan saving terrorists


இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை இன்று சந்தித்து பேசினார். பின்னர் அவர்கள் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

அப்போது பேசிய சுஷ்மா சுவராஜ், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்திற்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு உள்ளிட்ட உறவுகள் வலுவடைந்துள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதற்கும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கிறது என்பதற்கும் அண்மையில் ஆப்கானிஸ்தானில் நடந்த தாக்குதலே சான்று என தெரிவித்தார். பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுஷ்மா வலியுறுத்தினார்.

அதன்பிறகு பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும், அமெரிக்காவும் தோளோடு தோள் நிற்கின்றன. பயங்கரவாதிகள் பாதுகாக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பாகிஸ்தானில் பல பயங்கரவாத அமைப்புக்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது எனக்கூறினார்.

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிப்பதை இந்தியா, உலக அரங்கில் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.
 

click me!