பூச்சாண்டி காட்டிய “குண்டு பெண்”...! உயிரிழந்த 9 வயது சிறுமி..!  

9 yrs old girl died due to overweight of old lady
9 yrs old girl died due to overweight of old lady


பூச்சாண்டி காட்டிய “குண்டு பெண்”...! உயிரிழந்த 9 வயது சிறுமி..!  

“கண்டிப்பு” 

Latest Videos

இந்த வார்த்தையின் பொருள்  நமக்கு தெரியும் தானே.....சிறு வயதிலேயே கண்டிப்பு இல்லாமல்  குழந்தை வளர்ந்தால், பிற்காலத்தில் நாம் சொல்வதை குழந்தைகள் எதையும் கேட்காது என நம்  முன்னோர்கள் சொல்லி நாம் கேட்டு இருப்போம்
ஆனால் எப்படி கண்டிப்பது...எதற்கு கண்டிப்பது என்பதை ...6 அறிவு உள்ள மனிதர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.இதனையும் மீறி நடந்த ஒரு சம்பவம் தான் தற்போது ஏற்றுக்கொள்ளவே முடியாத நிலையில் உள்ளது 

அமெரிக்காவின் புளோரிட்டாவை சேர்ந்தவர் கிரேஸ் ஸ்மித் என்பவருக்கு ஒரு9 வயதுள்ள டெரிகா லின்ட்சே என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி சேட்டைசெய்வதில் அளவே  இருக்காது.....குழந்தை என்றால் அப்படி தானே இருப்பார்கள்....
 
இவர் சேட்டை செய்கிறார் என கூறி அவரது உறவினரான ஒரு பெண்மணியை அழைத்து மகளை கண்டிக்க சொல்லி உள்ளார். அவர் அழைத்த உறவினரான வெரோனிகா போஸ்ஸி என்பவர், சிறுமிக்கு தண்டனை வழங்குவதாக கூறி, அந்த சிறுமி மீது அமர்ந்து உள்ளார்.

இதில் சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, பின்னர் மாரடைப்பில் இறந்துள்ளார்.இது தொடர்பாக போலீசார் குண்டு பெண்மணி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.அந்த  குண்டு பெண்ணின் எடை 145 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது. வயதோ 64……
 
உடம்பு வளர்ந்த அளவிற்கு.... மூளை வளர வில்லையோ....

 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image