கதிர்வீச்சு, உடல்நலப் பிரச்சினைகள், மன அழுத்தம் என விண்வெளி வீரர்களின் வாழ்க்கை பல சவால்கள் நிறைந்தது. உயிரையே பணயம் வைத்து விண்வெளிக்குச் செல்லும் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் எதிர்பாராத விதமாக அமைந்த நீண்ட விண்வெளியில் பயணத்துக்குப் பின், தனது சக பயணி புட்ச் வில்மோருடன் பூமிக்குத் திரும்புவதற்குத் தயாராகி வருகிறார்.
முன்னாள் அமெரிக்க கடற்படை அதிகாரியும், அனுபவம் வாய்ந்த விண்வெளி வீராங்கனையுமான சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி ஆய்வுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார். நாசாவில் மிகவும் திறமையான விண்வெளி வீராங்கனைகளில் ஒருவராகவும் திகழ்கிறார். இவ்வளவு சிறந்து விளங்கும் சுனிதா வில்லியம்ஸ் எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்று தெரியுமா?
அமெரிக்க அரசாங்கத்தின் சம்பள அளவுகோல்களின்படி, நாசா விண்வெளி வீரர்களுக்கு அனுபவம் மற்றும் தரவரிசையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. நாசாவில் பணிபுரியும் விண்வெளி வீரர்களுக்கு பொதுவாக GS 12 முதல் GS 15 வரையிலான கிரேடுகளின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது.
பூமிக்குத் திரும்பும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர்; எப்போது தெரியுமா? நாசா அறிவிப்பு
ஜிஎஸ் 12 கிரேடு விண்வெளி வீரர்களின் அடிப்படை சம்பளம் ஆண்டுக்கு சுமார் 66,167 டாலர். இது தோராயமாக 55 லட்சம் இந்திய ரூபாய்க்குச் சமம். அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரர்கள் GS 13 அல்லது GS 14 பிரிவில் உள்ளனர். அவர்களின் சம்பளம் ஆண்டுக்கு சுமார் 90,000 டாலர் முதல் 140,000 டாலர் வரை இருக்கலாம். அதாவது ஆண்டுக்கு சுமார் 75 லட்சம் ரூபாய் முதல் 1.1 கோடி ரூபாய் வரை.
சுனிதா வில்லியம்ஸ் சொத்து மதிப்பு:
சுனிதா வில்லியம்ஸின் அனுபவம் மற்றும் பதவியைக் கருத்தில் கொண்டு, அவரது சம்பளம் GS 14 அல்லது GS 15 கிரேடுக்கு ஏற்ப இருக்கலாம். அவரது ஆண்டுச் சம்பளம் சுமார் 152,258 டாலர் (1.26 கோடி ரூபாய்) என்று பல செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. சம்பளத்தைத் தவிர, நாசாவில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு விரிவான சுகாதார காப்பீடு, மேம்பட்ட மிஷன் பயிற்சி, மனநல ஆதரவு, பயணச் சலுகைகள் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கின்றன.
சுனிதா வில்லியம்ஸ், பெடரல் மார்ஷலான கணவர் மைக்கேல் ஜே வில்லியம்ஸுடன் டெக்சாஸின் ஹூஸ்டனில் வசிக்கிறார். சுனிதா வில்லியம்ஸின் சொத்து மதிப்பு சுமார் 5 மில்லியன் டாலர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 ஜூன் 5 முதல் சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியுள்ளனர். இருவரும் பயணம் செய்த போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி ஓடத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பூமி திரும்ப 9 மாதங்களுக்கு மேல் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுனிதாவையும், புட்சையும் திரும்ப அழைத்து வருவதற்காக நாசா, ஸ்பேஸ்எக்ஸ் உடன் இணைந்து ஏவிய க்ரூ டிராகன் காப்ஸ்யூல் விண்வெளி நிலையத்தை அடைந்துவிட்டது. மார்ச் 19ஆம் தேதி சுனிதாவும், புட்சும் பூமிக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரும்பும் பயணத்தில் இவர்களுடன் க்ரூ-9 பயணத்தின் இவர்களுடன் மற்ற உறுப்பினர்களான நாசாவின் நிக் ஹேக் மற்றும் ரோஸ்கோஸ்மோஸின் அலெக்சாண்டர் கோர்பனோவ் ஆகியோரும் பூமிக்குத் திரும்புவார்கள்.
ஏமனில் ராணுவ நடவடிக்கையை நிறுத்துங்க! அமெரிக்காவுக்கு ஐ.நா. தலைவர் வலியுறுத்தல்