சூரியனின் தெற்கு அரைக்கோளத்தில் உள்ள காந்தத்தின் இழை வெடித்து பூமியை நோக்கி வந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூரியனின் தெற்கு அரைக்கோளத்தில் உள்ள காந்தத்தின் இழையில் சுமார் 2,00,000 நீளத்திற்கான இந்த வெடிப்பு ஏற்பட்டு இருப்பதாக https://spaceweather.com/ இணையத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த வெடிப்பு 4ஆம் தேதி, அதாவது நேற்றுக் காலை நிகழ்ந்துள்ளது. பூமியை பாதிக்கும் அளவிற்கு இந்த வெடிப்பு நிகழ்ந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க:ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் கடத்தல்… கலிபோர்னியாவில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!
அதாவது, ரேடியோ தொடர்புகள், எலக்டிரிக் கிரிட், கடற்படை சிக்னல்கள், விண்வெளி வீரர்கள் உள்பட விண்கலம் ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. சூரியனில் இருந்து வெளியான காந்த இழைகள் இந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:உக்ரைன் -ரஷ்யா போர்.. செல்ல பிராணிகளை மீட்டு தருமாறு ஆந்திர மருத்துவர் இந்திய அரசுக்கு கோரிக்கை
Nasa Solar Dynamics Observatory (SDO) நமது சூரியனின் படங்களை பல்வேறு அலைகளில் படம் பிடித்து அங்குள்ள அம்சங்களையும் செயல்பாட்டையும் படிக்க உதவுகிறது. சூரியன் அதன் சூரியச் சுழற்சியில் உச்சத்தை எட்டுவதால், உள் சூரிய மண்டலத்தில் இருந்து ஆபத்தான புதிய சூரிய புள்ளிகள் வெளியேறுகின்றன. நேற்று காலை வெளியேறிய சூரிய காந்த இழைகள் சிறிய துகள்களாக பூமியை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றன.