dubai temple:துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்! சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு

By Pothy RajFirst Published Oct 5, 2022, 12:15 PM IST
Highlights

இந்திய மற்றும் அரபிய கட்டுமானக் கலையின் கலவையாக, துபாயில் பிரமாண்டமான முறையில் கட்டமைப்பட்டுள்ள புதிய இந்துக்கோயில் ஜெபல் அலி கிராமத்தில் இன்று திறக்ககப்பட்டது. 

இந்திய மற்றும் அரபிய கட்டுமானக் கலையின் கலவையாக, துபாயில் பிரமாண்டமான முறையில் கட்டமைப்பட்டுள்ள புதிய இந்துக்கோயில் ஜெபல் அலி கிராமத்தில் இன்று திறக்ககப்பட்டது. 

சகிப்புத்தன்மை, அமைதி, ஒற்றுமை ஆகிய சக்திவாய்ந்த தத்துவங்களை தாங்கி இந்தக் கோயில் நிறுவப்பட்டுள்ளது. இந்த கோயிலில் சிவன் சன்னதி, விஷ்ணு சன்னதி, ஷாய்பாபா சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் தேர்தலில் இருந்து சசி தரூரை விலகச் சொல்லுங்க! ராகுல் காந்திக்கு நெருக்கடியா? விவரம் என்ன?

இந்த கோயில் முழுமையாகக் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து இந்து பக்தர்களின் தரிசனத்துக்காக நேற்று முறைப்படி திறக்கப்பட்டது. 

அபு தாபியில் உள்ள இந்தியத் தூதரகம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ துபாயில் உள் இந்துக் கோயிலை சகிப்புத்தன்மை துறை அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் திறந்துவைத்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 35 லட்சம் இந்தியர்களுக்காக இந்த கோயில் அமைக்கப்பட்டதற்கு இந்தியத் தூதர் சஞ்சய் சுதிர் யுஏஇ அரசுக்குநன்றி தெரிவித்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

கோயிலுக்கு வந்த பக்தர்களை வரவேற்கும் வகையில் அர்ச்சகர்கள் ஓம் சாந்தி, ஓம்சாந்தி என்ற மந்திரம் முழங்கியும், இசைக்கலைஞர்கள் தபேலா வாசித்தும், தோலக் மற்றும் ட்ரம்கள் வாசித்தனர்.

10 பேர் பயங்கர தீவிரவாதிகள்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

ஜெபல் அலி என்ற வழிபாட்டு கிராமத்தை ஐக்கிய அரபு அமீரக அரசு துபாயில் அமைத்துள்ளது. இந்த வழிபாட்டு கிராமத்தில் 9 விதமான மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. 7 தேவாலயங்கள், குரு நானக் தர்பார் சீக்கிய குருதுவாரா, இந்துக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்துக் கோயிலில் 3 பிரகாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதான பிரகாரத்தில் பிராத்தனைக் கூடம், சிவன், விஷ்ணு, ஷாய்பாபாவுக்கு தனித்தனி சன்னதிகளும் உள்ளன.

இந்தியத் தூதரகத்தின் முக்கிய அதிகாரிகள், பல்வேறு மதத் தலைவர்கள், வர்த்தகர்கள், இந்தியர்கள், இந்துக்கள் என200க்கும் மேற்பட்டோர் திறப்புவிழாவில் பங்கேற்றனர்.

இந்த கோயிலில் கையால் செதுக்கப்பட்டசிற்பங்கள், கலைநயம்மிக்க தூண்கள், பித்தளையால் அலங்கரிக்கப்பட்ட தூண்கள் என இந்திய, அரேபிய கட்டிடக்கலை கலந்து அமைக்கப்பட்டுள்ளது.

நவராத்திரியையொட்டி அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்… இணையத்தில் வைரலாகும் ஆந்திரா கோயில்!!

கோயிலின் அறங்காவலர் ஷ்ரோப் கூறுகையில் “ துபாயில் இந்துக் கோயில்திறக்கப்பட்டது இந்துக்களி்ன் கனவு மட்டுமல்ல, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்களின் கனவு. மதம் கலாச்சாரத்தை ஒருங்கிணைக்கும் என்பதற்கான அடையாளமாக கோயில் அமைந்துள்ளது. கொரோனா காலத்திலும் கோயில் பணிகள் பாதிக்காத வகையில் துபாய் அரசுதேவையான உதவிகளை அளித்தது.

துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசு ஏற்கத்தக்க மற்றும் இரக்கமுள்ளவை என்பதற்கு துபாய் இந்து கோயில் குறிப்பிடத்தக்க அடையாளம். 1958ல் நாட்டிலேயே முதன் முதலாக இந்துக் கோயில் துவக்கப்பட்ட நாளில் இருந்து இப்போதுவரை அமீரகத்தின் தாராள மனப்பான்மை அப்படியே உள்ளது” எனத் தெரிவித்தார்
 

click me!