18 வயது பெண் ஒருவர் 78 வயது விவசாயியை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
காதல் என்பது வயதையோ, செல்வத்தையோ பார்த்து வருவது இல்லை. நீங்கள் இவருடன் தான் காதலில் விழ போகிறீர்கள் என தெரிந்தே விழுவதில்லை. எனவே, காதலுக்கு கண் மட்டுமில்ல, வயதும் இல்லை என்று சொல்வது உண்டு.
இப்போது நாம் பார்க்கக்கூடிய சம்பவமும் இதனை போல ஒரு சம்பவம் தான். 75 வயது முதியவர் 15 வயது சிறுமியை காதலித்தார். சுமார் 3 வருடங்கள் காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்த திருமணத்திற்கு மணமக்கள் வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்குப் பிறகு இருவரும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இந்த சம்பவம் எங்கு நடந்தது தெரியுமா ? பிலிப்பைன்ஸ் நாட்டில்தான். 78 வயதான விவசாயி ரஷாத் மங்காகோப், 18 வயதான ஹலிமா அப்துல்லாவை மணந்தார். இந்த ஜோடி 3 ஆண்டுகளுக்கு முன்பு ககாயன் மாகாணத்தில் இரவு விருந்தின் போது சந்தித்தனர்.
இதையும் படிங்க..சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட சவுக்கு சங்கர்.. பின்னணியில் நடந்தது என்ன ?
78 வயதான ரஷாத்தின் முதல் திருமணம் இது என்று கூறியிருக்கிறார்கள் அவரது உறவினர்கள். அதே சமயம் ஹலிமாவின் முதல் காதலும் இதுதான். ஆகஸ்ட் 25ம் தேதி இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இருவரது காதலுக்கும் இரு வீட்டாரும் சம்மதித்துள்ளனர். நிச்சயிக்கப்பட்ட திருமணம் இல்லாமல், காதல் திருமணத்தை அதுவும் 78 வயது நபர் 18 வயது பெண் ஒருவரை திருமணம் செய்துள்ள சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் உருவாக்கி உள்ளது.
இதையும் படிங்க..மகளிர் விரும்பினால் பணத்தை வாங்கி கொண்டு டிக்கெட் கொடுக்கலாம்.. வாய்மொழி உத்தரவு உண்மையா ?