
சூடானில் ராணுவத்துக்கும், விரைவு துணை ராணுவப் படைக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பெரிய அளவில் போர் துவங்கி நடந்தது வருகிறது. தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த தாக்குதலில் நேற்று நடந்த தாக்குதல் பெரிய வான்வழி தாக்குதலாக கருதப்படுகிறது. இரண்டு ராணுவப் படைகளுக்கும் இடையே பீரங்கித் தாக்குதல் நடந்து வருகிறது.
தெற்கு கார்டோம் பகுதியில் நேற்று ட்ரோன் தாக்குதல் பெரிய அளவில் நடந்துள்ளது. இந்த நகரின் பெரும்பாலான பகுதிகளை துணை ராணுவப் படை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டுள்ளது. பெரும்பாலான மக்கள் காயம் அடைந்து சிகிச்சைக்கு வழி இல்லாமல் உள்ளனர். உள்ளூர் மக்கள் இந்தப் படங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்தப் பகுதியில் இருப்பவர்கள் பெரும்பாலும் தொழிலாளர்கள். இவர்கள் பணிக்கு செல்ல முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காயம் அடைந்தவர்களை அந்த இடத்தில் இருந்து அகற்றுவதற்காக ரிக்ஷா மற்றும் கழுதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சூடான் ராணுவத்தினர் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக விரைவு துணை ராணுவப் படையினர் தெரிவித்துள்ளனர். அனால், சூடான் ராணுவத்தினர் இதை மறுத்துள்ளனர்.
ஆபரேஷன் காவேரி ஆரம்பம்! சூடானில் இருந்து இந்தியா திரும்ப 500 இந்தியர்கள் ரெடி!