அரபு மொழி பேசுவோர் மற்றும் வேற்று மொழி பேசும் சிறுபான்மை குழுக்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் வெவ்வேறு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் 168 பேர் உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்த நாட்டில் 2003 ஆம் ஆண்டு முதல் டர்பர் மாகாணத்தை மையமாக கொண்டு உள்நாட்டு போர் நிலவி வந்தது.
கடந்த ஆண்டு ஆக்டோபர் மாதம் முதல் இந்த பகுதியில் உணவு, தண்ணீர் என அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, இங்குள்ள அரபு மொழி பேசுவோர் மற்றும் வேற்று மொழி பேசும் சிறுபான்மை குழுக்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
undefined
தாக்குதல்:
இவ்வாறு பழங்குடியினர் கூர்மையான ஆயுதங்களை கொண்டு அரபு மொழி பேசாத சிறுபான்மையினரை கண்மூடித் தனமாக தாக்கினர். முந்தைய பிரச்சினையின் போது இரண்டு பழங்குடியினர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என அங்குள்ள தனியார் தொண்டு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்த சம்பவம் மேற்கு டர்ஃபுர் பகுதியில் நடைபெற்று இருக்கிறது.
டர்ஃபுர் மாகாணத்தின் தலைநகர் ஜெனீனாவில் வசிக்கும் பழங்குடியினரில் இரு பிரிவுக்கு இடையே தான் இந்த மோதல் ஏற்பட்டது. இரு தரப்பையும் சேர்ந்த தனி நபர்களுக்கு இடையே முதலில் வாய்த்தகராறாக தொடங்கி அதன் பின் கோஷ்டி மோதலாக வெடித்தது. இரு தரப்பினரும் கூர்மையான ஆயுதங்களை கொண்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். மேலும் அங்கிருந்த வீடுகள், கால்நடைகள் சூறையாடப்பட்டன.
உயிரிழப்பு:
கடந்த இரு நாட்களாக நடந்த பயங்கர மோதலில் இதுவரை 168 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த மோதலில் 98-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் அந்த மாகாணத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சூடான் அரசு உயர்மட்ட அதிகாரிகளை அனுப்பி வைத்து இருக்கிறது.