
சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது ஜூன் 10, 1990 அன்று, பர்மிங்காமில் (லண்டன்) இருந்து மலகாவிற்கு (ஸ்பெயின்) பிரிட்டிஷ் ஏர்வேஸ் 5390 விமானத்தில் ஏறுவதற்கு பயணிகள் தயாராகிக் கொண்டிருந்தபோது, அவர்களுக்குக் காத்திருக்கும் ஒரு வேதனையான அனுபவத்தைப் பற்றி அவர்கள் அதிகம் அறிந்திருக்கவில்லை.
அதைத் தொடர்ந்து அன்று நடந்த நிகழ்வுகள், விமானப் பயணத்தின்பொது நடந்த மிகவும் அசாதாரணமான தப்பிப்பிழைத்த மனிதனின் கதைகளில் ஒன்றாக மாறியது. அந்த விமானத்தின் கேப்டன் டிமோதி லான்காஸ்டர், எதிர்பாராதவிதமாக அந்த விமானத்தில் இருந்து வெளியே எழுக்கப்பட்டுள்ளார். பதற்றம் நிறைந்த 20 நிமிடங்களுக்கு அவர் அந்த விமான காக்பிட் (விமானியின் அரை) ஜன்னல் ஓரத்தில் அபாயகரமாக தொங்கிக்கொண்டு பயணித்துள்ளார்.
ஒரு விமானத்தில் வெடிக்கும் டிகம்ப்ரஷன்ஸ் ஏற்படுவது விமானத்தில் இருப்பவர்களின் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இருப்பினும், எல்லா முரண்பாடுகளையும் மீறி, கேப்டன் சோதனையிலிருந்து தப்பிக்க முடிந்தது, இறுதியில் அவர் உயிர் பிழைத்த நம்பமுடியாத கதையை விவரித்துள்ளார், அதை இப்பொது கேட்கலாம்.
கிடைத்த தகவல்களின்படி, இந்த சம்பவம் நடந்த நாளில் 81 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன் அந்த விமானம் தனது பயணத்தை துவங்கியது. BA5390 விமானம் நீட்டிக்கப்பட்ட BAC 1-11-500 மூலம் இயக்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக 119 பயணிகள் அமரலாம். இது உள்ளூர் நேரப்படி 08:20 மணிக்கு பர்மிங்காமில் இருந்து புறப்பட்டது.
பர்மிங்காமில் இருந்து 13 நிமிட பயணத்தில், அந்த விமானம் துல்லியமாக 08:33 மணிக்கு சுமார் 17,300 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இந்த தருணத்தில் தான் BA 5390ன் கதை ஒரு கடுமையான மற்றும் அச்சுறுத்தும் திருப்பத்தை எடுத்தது. கேப்டன் லான்காஸ்டரின் பக்கத்திலிருந்த கண்ணாடி திடீரென விமானத்திலிருந்து துண்டிக்கப்பட்டது.
துண்டிக்கப்பட்ட அந்த ஜன்னலின் விளைவாக ஏற்பட்ட திடீர் டிகம்பரஷ்ஷன், கேப்டன் லான்காஸ்டரை விமானத்திலிருந்து வெளியே தள்ளியது. அதிர்ஷ்டவசமாக, அவர் தனது கால்களை ஃப்ளைட் கன்ட்ரோல்களில் சிக்க வைத்து, அவர் முற்றிலும் விமானத்தை விட்டு வெளியேறுவதை தடுத்துக்கொண்டார். ஆயினும்கூட, அவரின் இந்த நடவடிக்கை தன்னியக்க பைலட்டை முறையை துண்டித்துள்ளது.
உடனே துணை விமானி அலிஸ்டர் அட்செசன், ஆக்சிஜன் முகமூடியை விரைவாக அணிவித்து, விமானத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டார். இதற்கிடையில், விமான தளத்தில், பணிப்பெண் நைகல் ஆக்டன் உடனே உள்ளே வந்து கேப்டன் லான்காஸ்டரின் கால்களைப் இருகப்பற்றிக்கொண்டார். மேலும் ஒரு பணியாளரும் உள்ளே வந்து நிலைமையை சமாளிக்க ஒத்துழைத்தார்.
உடனடியாக செயல்பட துணை கேப்டன் அவசர அவசரமாக அருகில் இருந்த ஓடுதளத்தில் விமானத்தை இறக்க முடிவு செய்தார். இறுதியில் விமானம் பாத்திரமாக தரையிறங்க உள்ளே இழுக்கப்பட்ட கேப்டன் லான்காஸ்டர் முழங்கை, மணிக்கட்டு மற்றும் கட்டைவிரல் போன்ற இடங்களில் ஏற்பட்ட காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நலமடைந்து வீடு திரும்பிய அவர் தனது 20 நிமிட திகில் அனுபவத்தை அப்போது பகிர்ந்துகொண்டுள்ளார். இதை அடிப்படையாக கொண்டு ஒரு தொலைக்காட்சி தொடர் எடுக்கப்பட்டுள்ளது.