பிரதமர் மோடியை கேலி செய்த அமைச்சர்களை சஸ்பெண்ட் செய்த மாலத்தீவு அரசு

By SG Balan  |  First Published Jan 7, 2024, 7:09 PM IST

மாலத்தீவு வெளியுறவுத்துறையின் அறிக்கையில், கருத்து சுதந்திரத்தை பொறுப்பாக பயன்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசு பதவிகளில் இருக்கும்போது இதுபோல நடந்துகொள்பவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்படுவர் என்றும் கூறியுள்ளது.


இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராக சமூக வலைதளங்களில் தரக்குறைவாகப் பதிவிட்ட அமைச்சர்களை சஸ்பெண்ட் செய்து மாலத்தீவு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்த மாலத்தீவு அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய கருத்துகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் பதிவுகள் வெளியிடப்படுவது குறித்து இந்திய அரசு எழுப்பிய கவலைகளுக்கு மாலத்தீவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. சம்பந்தபட்ட அமைச்சர்கள் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது.

Tap to resize

Latest Videos

ஸ்பேஸ்எக்ஸ் நிகழ்ச்சிக்கு முழு போதையில் வந்து அசிங்கமாகப் பேசிய எலான் மஸ்க்!

இருப்பினும் இடைநீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. அந்நாட்டு ஊடக அறிக்கைகளின்படி, இடைநீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்களில் மரியம் ஷியுனா, மல்ஷா மற்றும் ஹசன் ஜிஹான் ஆகியோர் அடங்குவர் என்று தெரியவருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 4ஆம் தேதி லட்சத்தீவுக்குச் சென்று, ஸ்நோர்கெல்லிங் செய்வது போன்ற படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். இந்த படங்கள் வைரலானதை அடுத்து பலர் அவற்றை மாலத்தீவுடன் ஒப்பிட்டு, மாலத்தீவை விட சிறந்த சுற்றுலாத் தலம் என்று கூறினர். இதன் எதிரொலியாக மாலத்தீவு அரசியல் தலைவர்கள், பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சனம் செய்தனர்.

மாலத்தீவு அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அறிக்கையில், பொறுப்பான முறையில் கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. சர்வதேச நட்பு நாடுகளுடனான உறவில் வெறுப்பு, எதிர்மறை எண்ணங்கள் மற்றும் சர்ச்சைகள் பரவுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

click me!