Pig Kidney : "இனி டயாலிசிஸ் தேவையில்லை".. பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட முதல் மனிதர் - வீடு திரும்பினார்!

By Ansgar R  |  First Published Apr 4, 2024, 6:08 PM IST

Pig Kidney For Man : உலகில் முதல் முறையாக பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட மனிதர், மருத்துவமனையில் இருந்து நலம்பெற்று வீடு திரும்பியுள்ளார்.


மருத்துவ உலகில் முதன் முறையாக, மரபணு மாற்றப்பட்ட பன்றியிடம் இருந்து பெறப்பட்ட சிறுநீரகதை, அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக 62 வயதான ஒரு நபருக்கு பொருத்தி மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நபர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். 

இந்த முன்னேற்றமானது, பன்றி உறுப்புகளைப் பயன்படுத்தி கடந்த காலத்தில் தோல்வியுற்ற சில முயற்சிகளைத் தொடர்ந்து, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு வரலாற்று மைல்கல் இதுவென்று என்று விஞ்ஞானிகளால் பாராட்டப்பட்டது. உலக அளவில் இவ்வாறு பொறுத்தப்படுவது இதுவே முதல் முறை.

Tap to resize

Latest Videos

பென்ஷன் வாங்கும் அரசு ஊழியர்கள் இதை கவனிச்சீங்களா? இனி இரண்டு அடுக்கு பாதுகாப்பு கட்டாயம்!

மசாசூசெட்ஸில் உள்ள வெய்மவுத் பகுதியைச் சேர்ந்த அந்த நோயாளி ரிச்சர்ட் "ரிக்" ஸ்லேமேன், இறுதி நிலை சிறுநீரக நோயுடன் போராடி வந்ததாகவும், அவருக்கு உடனே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகவும் மருத்துவமனை கூறியது. கடந்த மார்ச் 16 அன்று, அவரது மருத்துவர்கள் நான்கு மணிநேர அறுவை சிகிச்சையின் மூலம் மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரகத்தை வெற்றிகரமாக அவரது உடலில் மாற்றினர்.

திரு. ஸ்லேமனின் சிறுநீரகம் தற்போது நன்றாக செயல்பட்டு வருவதாகவும், அவருக்கு இனி டயாலிசிஸ் தேவையில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். திரு ஸ்லேமேன் வெளியிட்ட ஒரு அறிக்கையில், மருத்துவமனையை விட்டு வெளியேறி வீட்டிற்குச் செல்வது தனது வாழ்க்கையின் "மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாகும்" என்று கூறினார்.

"பல ஆண்டுகளாக எனது வாழ்க்கைத் தரத்தை பாதித்துள்ள டயாலிசிஸ் சுமையிலிருந்து விடுபட்டு எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார் அவர். கடந்த 2018 ஆம் ஆண்டில், இறந்து உடல் தானம் செய்பவரிடமிருந்து அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

இருப்பினும், கடந்த ஆண்டு, இடமாற்றம் செய்யப்பட்ட சிறுநீரகம் மோசமடையத் தொடங்கியது, அப்போது தான் பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான சாத்தியக்கூறுகளை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். "இது எனக்கு உதவுவதற்கான ஒரு வழியாக மட்டுமல்ல, உயிர்வாழ மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையை வழங்குவதற்கான ஒரு வழியாகவும் நான் பார்த்தேன்," என்று அவர் கூறினார்.

அவர் பெற்ற புதிய பன்றி சிறுநீரகத்தை கேம்பிரிட்ஜ் சார்ந்த மருந்து நிறுவனமான eGenesis மாற்றியமைத்தது, "தீங்கு விளைவிக்கும் பன்றி மரபணுக்களை அகற்றி, மனிதர்களுடன் அதன் இணக்கத்தன்மையை மேம்படுத்த சில மனித மரபணுக்களை அதில் சேர்த்திருப்பதாக" கூறப்படுகிறது. 1954ம் ஆண்டில், உலகின் முதல் வெற்றிகரமான மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் முன்னோடியாக அதன் பாரம்பரியத்தைப் பயன்படுத்தியதாக மருத்துவமனை குறிப்பிட்டது.

கச்சத்தீவு விவகாரம்: இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்!

click me!